Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு?

.

நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? எனும் கோசத்துடன் யாழ் செம்மணியில் மாபெரும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சிறிலங்காவின் நீதி அமைச்சர் செம்மணி மனித புதைகுழிக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வட கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் செம்மணியில் இன்று மாலை இப் போராட்டம் நடைபெற்றது.

இப் போராட்டத்தில் கலந்து கொள்வதில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர்களுக்கு எதிராக பொலிஸார் நீதீ மன்ற தடையுத்தரவை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் செம்மணியில் குவிக்கப்பட்டுள்ள நிலையிலும் இப் போராட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், அரசியல் பிரமுகர்கள் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

காணொளி : https://youtu.be/YJYtBtimOdk