Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பிரான்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி

மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பிரான்சின் அமைந்துள்ள ரியூனியன் தீவில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தகவல் வெளியிட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

அங்கு உருவாகி உள்ள புயலால் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யும் என பிரான்ஸ் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. 

அதன்படி புயல் கரையை கடந்தபோது மணிக்கு சுமார் 240 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதினை தொடர்ந்து ரியூனியன் தீவில் பெய்து வந்த கன மழையால் அங்குள்ள நகரங்கள் வெள்ளக்காடாக மாறின. இதில் பல வீடுகளும் சேதமடைந்தன.

மேலும் சாலையில் சென்ற பல கார்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. எனவே வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலியாகினர். பலர் மாயமாகி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் பலத்த காற்று வீசியதால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

பிரான்ஸில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 4 பேர் பலி | Four Dead In Flooding Caused Heavy Rain In France

இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதில் சுமார் 2 லட்சம் வீடுகள் இருளில் மூழ்கின. எனவே அங்கு வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக முடங்கியது. இதற்கிடையே பிரான்சில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மீட்பு படையினர் அங்கு விரைந்து உள்ளனர்.