Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்!

கர்தினால் மல்கம் றஞ்சித் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பதை தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும்?

வடக்கு கிழக்கில் உள்ள ஆயர்கள் அருட்தந்தையர்கள் கர்தினால் மல்கம் றஞ்சித் எத்தகைய மனநிலையில் இருக்கிறார் என்பது தொடர்பில் தமிழ்மக்களுக்கு தெளிவுபடுத்தவேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டணியின் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ்பிறேம சந்திரன் தெரிவித்தார். 
அண்மையில் கர்தினால் மல்கம் றஞ்சித் பேராயர் சுயநல அரசியல் குறுக்கு வழிகளினாலேயே வடக்கு கிழக்கு யுத்தம் உருவானது என நிகழ்வு ஒன்றில் கருத்துதெரிவித்தமை தெடர்பில் கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார் .

அவர் மேலும் தெரிவிக்கையில் ,
தமிழ்மக்களின் போராட்டம் என்பது ஒரு அர்ப்பத்தனமான போராட்டம் என்பது போலவும் சிலர் தங்கள் சுயிலாபத்திற்கு தொடங்கியது போலவும் அதனை வியாக்கியானங்களை சொல்ல முற்படுவதும் ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல அவர் தொடர்ந்தும் ஈழத்தமிழ் மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்துகின்ற செயல்களும் மேலும் செம்மணி புதைகுழுயில் 400 மேல் புதைக்கட்பட்டிருக்கிறார்கள் இது முன்னைய ஆட்சியில் இராணுவத்தினரின் மோசமான செயல் என்பதை இலங்கையில் இருக்கூடிய மதகுரு என்பவர் அதனை உலகிற்கு சரியான மொழியில் கூறவேண்டும் என்பதா இல்லையா என்ற கேள்வி இருக்கின்றது.

ஆனால் இவற்றை அவர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை இவற்றுக்கு மாறாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் காப்பாற்றுவதற்கும் இலங்கை இராணுவத்தை காப்பாற்றுவதற்கான வழிமுறைகளை செய்கின்றாரே தவிர தமிழ் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலோ வெளிநாட்டிலோேசியதாக இல்லை கருதினால் மல்க்கம் ரஞ்சித் ஒரு கிறிஸ்தவ மதகுரு என்ற அடிப்படையில் தமிழ் கிறிஸ்தவர்கள் அவருக்கு மரியாதையை வழங்கலாம் ஆனால் தமிழ் மக்கள் கிறிஸ்தவர்களாக இருக்கலாம் இந்துக்களாக இருக்கலாம் முஸ்லிம்களாக இருக்கலாம் எங்களுடைய போராட்டம் என்பது மக்களுக்கான போராட்டம் அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிரான போராட்டம் .30 வருடத்திற்கு மேலாக தங்களது உரிமைகளுக்காக பல லட்சம் உரிமைகளைக் கொடுத்து போராடுகின்றபோது அந்தப் பேராட்டத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாது  ஏன் ஆரம்பிக்கப்பட்டது என்பதைக்கூட புரிந்து கொள்ளாத சிறு பிள்ளைத் தனமாக மாத்திரமன்றி அதனை அநாகரிகமான முறையிலும் குதர்க்கமான முறையிலும் கருத்துக்களை கூற முற்படுவது ஏற்புடையது அல்ல வடக்கு கிழக்கிலுள்ள ஆயர்களாக இருக்கலாம் அருட்தந்தையர்களாக இருக்கலாம் கருதினால் கூறும் விடையத்தில் மௌனமாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு முக்கியபொறுப்பு உள்ளது கருதினாலுக்கு என்ன கூறவேண்டும் என்ற விடையத்தில் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றோம் என்பதையும்தெளிவு படுத்த வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணம் உட்பட கிறிஸ்தவ அருட்தந்தையர்கள், மக்கள் போராட்ட களத்தில் இருந்தவர்கள் உயிர்களை கொடுத்தவர்கள் இவை எல்லாம் தெரிந்து கூட கருதினால் மல்கம் ரஞ்சித் இவை எல்லாவற்றையும் ஓரம் தள்ளி கருத்துக்களை வெளியிடுவது என்பது போராட்டத்தில் உயிரிழந்த கிறிஸ்தவர்களின் ஆன்மாக்களை அககௌரவப்படுத்துகின்ற காரியமாகவே பார்க்கின்றார் என்பதைத்தான் நாம் பார்க்கின்றோம் 

இவை தொடர்பில் பல தடவைகள் நாம் கருத்துக்களை கூறியிருக்கின்றோம் அவரும் எமது போராட்டத்தை கொச்சைப் படுத்தும் நபராகவே இருக்கின்றார் அவர் இன்னும் எவ்வளவு காலம் பதவியில் இருப்பார் என்று தெரியாது அவர் இருக்கின்ற காலத்தில் அவருடைய தவறுகளை அவரே திருத்திக் கொள்ளவேண்டும் தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற கிறிஸ்தவர்கள் கருதினாலுக்கான மரியாதையை வழங்குவார்களா என்பது கேள்வியாகவுள்ளது அவர் அதனைப் புரிந்துகொள்ளவேண்டும்.

வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் ஆயர்களுக்கு கருதினால் மல்க்ககம் ரஞ்சித்திற்கும் இடையியலா கலந்துரையாடல்கள் மாகாணங்களில் நிலவுகின்ற பிரச்சினைகளை எவ்வாறு எடுத்துதுக் கூறுகின்றார்க்ள அவர் விளங்ககிக் கொள்கிறர்களா இல்லையா என்பது பற்றி தமிழ்மக்களுக்கு கிறிஸ்தவர்களுக்காவது தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.