Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்!

இராமநாதன் அர்ச்சுனா, மிகக்கடுமையாக ஏக வசனங்களை பயன்படுத்தி கஜேந்திரகுமாரைச் சாடியமை குறிப்பிடத்தக்கது.

வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது. இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள ஆணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன.
குறிப்பாக இராமநாதன் அர்ச்சுனா, மிகக்கடுமையாக ஏக வசனங்களை பயன்படுத்தி கஜேந்திரகுமாரைச் சாடியமை குறிப்பிடத்தக்கது.