Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ரஷ்ய இராணுவ விமானம் விபத்து - 29 வீரர்கள் உயிரிழப்பு!

விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. - பாதுகாப்பு அமைச்சகம்

ரஷ்யாவின் 'அன்டோனோவ்-26' (An-26) ரக இராணுவ போக்குவரத்து விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 29 பேரும்உயிரிழந்துள்ளதாகரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.  நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது.  விபத்துக்குள்ளான விமானத்தில் 6 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் என மொத்தம் 29 பேர் பயணித்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.