Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ !

கன்றை காக்க தாய்மடி கை தூக்கி வணங்கியதோ!!

செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ !
முத்து முத்தாய் சிரிப்பாளோ மூக்கை சுழற்றி முகநளினம் செய்வாளோ
காக்கை விரட்டிய கைகள் இதுவோ காலம் கடந்து நடக்கும் கால்கள் அதுவோ !

மூச்சிளைத்தாளோ முன்னால் தகப்பன் நின்றிருந்தானோ
காய்ச்சிய ஈயத்தை காதிலே ஊற்றும் கதறல்கேட்டு துடித்தானோ !

கன்றை காக்க தாய்மடி கை தூக்கி வணங்கியதோ
தன்னை முன்னே கொல்லென அது தயவாய் கேட்டதுவோ?

என்றோ இறந்துபோன என்னைவிட மூத்தவளே 
இன்னும் குழந்தையாய் இருக்கும் இறவா வரம் பெற்றவளே !

மலமென்று நினைத்து உன்னை மண்ணுக்குள்ளே புதைத்தாலும்
மலைபோல் எழுந்தின்று மனு நீதி கேட்கின்றாயோ !

மிச்சம் மீதி வையாதேயென மேலிடத்தான் சொன்னதினால்
பச்சிளம் பாவையையும் கொன்றாயோ பாதகனே ! புத்தனை கொன்றொழித்து
போதிமரத்தை விறகாக்கி நீ மூட்டிய நெருப்பு இன்னும் எரியுது காண்பாய் !
உன்னையும் சுடுமந்த ஊழிக்காலத்தீயில் உண்மை புகைவதை பார் !

காலக்கடிகாரம் இன்று ஓலம் விட்டு கேட்கிறதே
எலும்பை மட்டும் எண்ணி வைத்தால் எழும்பாத நீதி எழும்பி வருமோ? 

அ.நடேசன்