ஹெஸ்புல்லா தலைவரின் வாரிசு மரணத்தை உறுதிபடுத்திய இஸ்ரேல்!
.
ஈரான் ஆதரவு பெற்ற லெபனான் போராளிக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கடந்த மாதம் கொல்லப்பட்ட மறைந்த ஹெஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவின் வாரிசான ஹஷேம் சஃபிதீனைக் கொன்றதாக இஸ்ரேல் செவ்வாயன்று (23) உறுதிப்படுத்தியது.
பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதியில் மூன்று வாரங்களுக்கு முன்பு நடத்தப்பட்ட தாக்குதலில் சஃபிதீன் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் கூறியது.
இஸ்ரேலின் இந்த அறிக்கைக்கு ஹிஸ்புல்லாவிடமிருந்து உடனடி பதில் எதுவும் வரவில்லை.
இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் தனது மூத்த தளபதிகள் பலியாகியதால் தத்தளித்து வரும் ஹெஸ்பொல்லாவுக்கு இந்த அறிவிப்பு மற்றுமோர் பேர் இடியாக அமைந்துள்ளது.
இந்தக் குழு மத்திய கிழக்கு முழுவதும் ஈரானின் பினாமி படைகளில் மிகவும் வலிமையான ஆயுதம் மற்றும் காசாவில் இஸ்ரேலுடன் போராடும் பாலஸ்தீனிய போராளிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.