பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்,
,

பலமான எதிரணிக்காக சஜித் தரப்பு வியூகம்! தமிழ்க் கட்சிகளும் சங்கமம்,
பலமானதொரு எதிரணியைக் கட்டியெழுப்பி நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் கூட்டாகச் செயற்படுவது தொடர்பில் எதிர்க்கட்சிகளுக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் நாடாளுமன்றத்திலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
சமகால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்துக்குள்ளும், நாடாளுமன்றத்துக்கு வெளியிலும் கூட்டாக இணைந்து செயற்படுவது தொடர்பாக எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளிடையே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வதே இந்தக் கலந்துரையாடலின் முக்கிய நோக்கம் என்று எதிர்க்கட்சித் தலைவரின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றின் எம்.பி.க்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.