Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜனாதிபதி, பிரதமர் பதவிகளைப் பிரித்துக் கொண்ட ரணில், அநுர

.

தற்போதைய ஜனாதிபதி, தன்னை தோல்வியடையச் செய்து அநுரகுமாரவை வெற்றியடைய செய்வதற்கு வித்தியாசமான கூட்டமைப்பு ஒன்றைஏற்படுத்தியுள்ளார் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புத்தளத்தில் நேற்று இடம்பெற்ற 43 ஆவது மக்கள் வெற்றி பேரணியில் கலந்துக்கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ரணிலும் அநுரவும் சிறந்த அரசியல் டீல் ஒன்றை செய்திருக்கின்றனர். அவர்களுடைய டீல் தொடர்பில் எனக்கு பிரச்சினை இல்லை. எனக்கு 220 இலட்சம் மக்களுடனே டீல் இருக்கின்றது. இந்த மக்கள் வீழ்ந்துள்ள இடத்திலிருந்து மீட்டெடுப்பதே எதிர்பார்ப்பு.

சோசலிசம் குறித்து கதைக்கின்ற அநுகுமார, ரணில் விக்ரமசிங்க உடன் டீல் செய்திருக்கின்றார். இவர்கள் நாட்டை கட்டியெழுப்பாமல் அவர்களின் முன்னேற்றத்திற்காகவே டீல் செய்திருக்கின்றார்கள்.

அவர்கள் இருவருக்கும் ஜனாதிபதி பிரதமர் பதவிகளை பிரித்து கொண்டு இருக்கின்றார்களா என்கின்ற சந்தேகமும் இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான பொறுப்புக் கூற வேண்டிய தீவிரவாதிகளுக்கும், மிலேச்சத்தனமான சூத்திரதாரிகளுக்கும் சட்டத்தின் முன் நிறுத்தி வழங்கப்பட வேண்டிய அதிகபட்ச தண்டனையை வழங்குவோம்.

சஜித் பிரேமதாச என்பவர் பணத்திற்காகவும், பதவிகளுக்காகவும், வரங்களுக்காகவும் விலை போகின்றவர் அல்ல. 220 இலட்சம் மக்களின் நம்பிக்கையை வென்றவராக ஆத்ம கௌரவத்தை பாதுகாத்து செயல்படுகின்ற ஒருவராவார்.

எனவே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலத்தை ஆராய்ந்து அதனை வெளிப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்தர்ப்பத்தில் வாக்குறுதியளித்தார்.