Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது!

கிளிநொச்சி பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க அலுவலகத்தில் தீ பரவல்!

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்கிரமரத்னவின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. அவர் கைத்துப்பாக்கியுடன் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதால் அவர் தற்கொலை செய்துகொண்டாரா என்ற கோணத்தில் விசாரணைகள் ஆரம்பிக்க்கப்பட்டுள்ளன. அத்துருகிரியவில் அவரது இல்லத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.30 வருட காலம் பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றிய விக்கிரமரத்ன, நாட்டின் 35 ஆவது பொலிஸ் மா அதிபராவார்.

மியான்மாரில் இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் 500 பேர் வரை உயிரிழப்பு!
அகதிகளை ஏற்றி சென்ற இரண்டு படகுகள் விபத்துக்குள்ளானதில் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மியான்மாரில் நிலவும் கடுமையான ராணுவ அடக்குமுறை மற்றும் இனப்படுகொலை அச்சுறுத்தல்களால், அங்கிருந்து தப்பித்து வரும் ரோஹிங்கியா அகதிகள், பாதுகாப்பற்ற படகுகள் மூலம் வங்கதேசம், இந்தியா மற்றும் மலேசியா போன்ற நாடுகளுக்கு செல்கின்றனர். இந்நிலையில், கடந்த ஜூலை 8-ஆம் தேதி, மோசமான வானிலை மற்றும் கடல் சீற்றத்தால், சுமார் 250 மற்றும் 280 பேருடன் சென்ற இரண்டு படகுகள் வங்கக்கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகின. இந்தப் பரிதாபகரமான விபத்தில், 500-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

கிளிநொச்சி  பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க அலுவலகத்தில் தீ பரவல்! 
கிளிநொச்சி கரடிப்போக்கு சந்தியில் அமைந்துள்ள பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று (17) அதிகாலை தீ பரவல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் இன்று அதிகாலை சுமார் 1.00 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. அலுவலகத்திலிருந்து புகை வெளியேறுவதை அவதானித்த காவலாளர், உடனடியாக சங்கத்தின் பணியாளர்களுக்கு தகவல் வழங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற பணியாளர்கள் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். 
இந்த தீ விபத்தில் வளிச்சீராக்கி, நிழற்படப் பிரதி இயந்திரம் உள்ளிட்ட பல இலட்சம் ரூபா பெறுமதியான அலுவலக உபகரணங்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீ விபத்திற்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது!
அதி உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில், கடந்த 36 ஆண்டுகளாகத் தங்களின் பூர்வீகக் காணிகளை இழந்து நிர்க்கதியாக நிற்கும் மயிலிட்டி மக்கள், அந்த நிலங்களை விடுவிக்கக் கோரி முன்னெடுத்து வரும் அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்ந்தது. ​மயிலிட்டி மீள்குடியேற்ற அபிவிருத்திக்குழு மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்கத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்று வரும் இப்போராட்டத்தில், வலி வடக்கு வலையத்தைச் சேர்ந்த ஜே/248, ஜே/251, ஜே/246 மற்றும் ஜே/255 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.

முன்பதாக யுத்த காலப்பகுதியில் இடம்பெயர்ந்த இப்பகுதி மக்கள், இன்றுவரை வெவ்வேறு பிரதேசங்களில் அகதி வாழ்வை வாழ்ந்து வருகின்றனர். அதேநேரம் யுத்தம் முடிவுக்கு வந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், தங்களின் சொந்த நிலங்கள் இராணுவத்தின் அதி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முடக்கப்பட்டிருப்பது, வாழ்வாதாரத்தையும், பூர்வீகமாக வாழ்ந்த சொந்த அடையாளத்தையும் இழந்துள்ள மக்களின் மனவேதனையை மேலும் அதிகரித்துள்ளது.

இதேவேளை கடந்த அரசாங்கத்தினால் விடுவிப்பதாக இணக்கம் காணப்பட்ட காணிகள் கூட, தற்போதைய அரசாங்கத்தினால் விடுவிக்கப்படாமல் இழுத்தடிப்புச் செய்யப்பட்டு வருவதாக மக்கள் கடும் விசனத்தைத் தெரிவித்துள்ளனர். சொந்த நிலங்களை மீளப் பெற்று, கண்ணியமான முறையில் மீள்குடியேற விரும்பும் மக்களின் கோரிக்கைக்கு தற்போதைய அரசாங்கம் செவிசாய்க்க வேண்டு  என்பதே மக்களுன் எதுர்பார்ப்பாக இருக்கின்றது.

முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் சுரேஷ் சலே வழக்கு நீதிமன்றம் திகதி நிர்ணயம்!
குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் தாம் கைது செய்யப்படுவதற்கும் தடுப்புக்காவலில் வைக்கப்படுவதற்கும் சவால் விடுத்து, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தாக்கல் செய்துள்ள மனு தொடர்பான, வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இடையீட்டு மனுக்களை விசாரணை செய்வதற்கான திகதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
இதற்கு அமைய எதிர்வரும் ஒகஸ்ட் 4ஆம் திகதி குறித்த மனுக்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 

இவ்வழக்கில் பெங்கமுவே நாலக தேரர் மற்றும் பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உட்பட 8 தரப்பினர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்தார். இந்த மனுக்கள் இன்று (17) அழைக்கப்பட்ட போது, மனுதாரர் சார்பில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தனவின் சமர்ப்பணங்கள் நிறைவடைந்த பின்னரே இந்த இடையீட்டு மனுக்கள் பரிசீலிக்கப்படும் என மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதியரசர் ரோஹந்த அபேசூரிய தெரிவித்தார். இதற்கமைய, இடையீட்டு மனுதாரர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகளின் இணக்கப்பாட்டுடன், தொடர்புடைய மனுக்களை எதிர்வரும் ஒகஸ்ட் 4 மற்றும் 6ஆம் திகதிகளில் பரிசீலனைக்காக அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.