Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மைத்திரிபால, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்!- எம். ஏ. சுமந்திரன்

தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தார்கள்.

மைத்திரிபால, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம்!

மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம் என யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலாவது தேர்தலில் தமிழ் மக்கள்  சரத் பொன்சேகாவிற்கு வாக்களித்தார்கள், நாங்கள் சொல்லி தான் மக்கள் அவருக்கு வாக்களித்தார்கள் என்பது பொய். தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த வாக்குகளை விட சரத் பொன்சேகாவிற்கு இரண்டு மடங்காக மக்கள் வாக்களித்தார்கள்.

ஆகவே நாங்கள் கூறி தான் அவருக்கு வாக்களித்தார்கள் என்பது தவறு, தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிக்க தீர்மானித்து விட்டார்கள். அது ஒரு எதிர்ப்பு வாக்கு மகிந்த ராசபக்சவிற்கு எதிரான வாக்கு.

அம்பாறையில் ஒரு சிறிய கிராமத்தில் மக்கள் கருத்து கேட்ட போது ஒரு இளைஞன் கூறிய கருத்து, மகிந்தாவும் எங்களுக்கு எதிரி தான் மைத்திரிபாலவும் எதிரி தான் ஆனால் எங்களுக்கு ஒரு எதிர்மாற்றம் தேவை என கூறி தான் வாக்களித்தார்கள்.

ஆயிரக்கணக்கான காணிகள் விடுவிக்கப்பட்டது உண்மை மைத்திரிபால சிறிசேன காலத்தில் எங்களுக்கு எதிராக இருந்த பல அடக்குமுறைகள் இல்லாமால் ஆக்கப்பட்டது உண்மை மக்களுக்கு மிகவும் அத்தியாவசியமாக இருக்கின்ற விடயங்களை நாங்கள் அடையலாம் அதற்கு மைத்திரிபால சிறிசேன, ரணில் ஆட்சிக்காலம் ஒரு உதாரணம் என தெரிவித்தார்.