Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது

அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகள் 362

இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது. இது வரை காலமும் மன்னர் சதொச புதைகுழியில் இருந்து 376 மனித என்பு கூடுகள் மீட்கப்பட்டமையே , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் மீட்கப்பட்ட புதைகுழியாக காணப்பட்டது.
இந்நிலையில் செம்மணியில் புதன் கிழமையுடன் 380 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன..

அடையாளம் காணப்பட்ட என்பு கூடுகளில் 362 என்பு கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் , இலங்கையில் அதிகளவான மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்ட மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவாகியுள்ளது.
அதேவேளை குறித்த செம்மணி மனித புதைகுழியை வெள்ளிக்கிழமை (19) நீதி அமைச்சர் தலைமையிலான விசேட குழுவினரும் , காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் ஆணையாளர்கள் உள்ளடங்கிய விசேட குழுவினரும் நேரில் பார்வையிட நீதிமன்றில் அனுமதி கோரி இருந்த நிலையில் அவர்களுக்கான அனுமதியை நீதிமன்று வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.