Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா?

சித்த மருத்துவ மாணவ குழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன்

சிரமத்தில் சித்த மருத்துவ மாணவர்கள்: அரசாங்கம் காரணமா?

இலங்கை முழுவதும் 359 சித்தமருத்துவ மாணவர்கள் உள்ளக பயிற்சிக்காக காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளதாக உள்ளக பயிற்சிக்கு எதிர்பார்க்கும் சித்த மருத்துவ மாணவ குழுவின் யாழ் பிரதிநிதி வர்ணகுலசிங்கம் பிரவீன் தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்று திங்கட்கிழமை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,

ஆயுர்வேதத் திணைக்களத்தின் குளறுபடியான சில நடவடிக்கைகள் மூலம் நாம் பாதிக்கப்பட்டுள்ளோம்.

இதனால் எமது உள்ளகபயிற்சி தடைபட்டுள்ளது. அவர்களுடன் எங்களுடைய பிரச்சனை தொடர்பில் கூறியுள்ள போதிலும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு 60 பேருக்கு மாத்திரம் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தனர்.

உள்ளக பயிற்சி என்பது அனைத்து மாணவர்களுக்குமான உரிமை. 60 மாணவர்களுக்கு மாத்திரம் எவ்வாறு அனுமதியினை பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு வழங்க முடியும்.

அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு காரணமாகவே இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் இது அரசாங்கத்தின் தவறேயின்றி மாணவர்களுடைய தவறல்ல.

இதற்குக் காரணம் ஆயுர்வேத திணைக்களம் உள்ளிட்ட ஏனைய திணைக்களங்கள். இவர்களுடைய இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நமது கற்க நெறியை பூரணமாக நிறைவு செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

தற்பொழுது 30 வயதினை எட்டியுள்ள போதிலும் நீண்ட காலமாக உள்ளகப் பயிற்சியினை நிறைவு செய்யாததால் எமது கற்கை பூரணப்படுத்தப்படவில்லை.

உள்ளக பயிற்சி நிறைவு செய்யப்பட்டால் மாத்திரமே ஆயுர்வேத சங்கத்தில் எங்களை ஒரு வைத்தியராக பதிவு செய்ய முடியும்” என ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.