புதிய கூட்டணிக்கு ரணிலே தலைவர்!
.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான புதிய கூட்டணிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்பிரிய இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய கூட்டணியை உருவாக்கும் நோக்கில் எதிர்க்கட்சிகளின் அரசியல் கட்சிகள் பல்வேறு கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றன.
எனினும் பொதுத் தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிட ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே தீர்மானித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டு சேர்வது குறித்து ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடிய போதிலும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த நிபந்தனைகளால் பேச்சுவார்த்தை முறிவடைந்தது.
இதேவேளை, கேகாலை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்திய முன்னாள் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகள் குழு நேற்று (05) மௌபிம ஜனதா கட்சியில் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.