Breaking News
பாஸ்போர்ட்டுகளை பெற புதிய தேசிய அடையாள அட்டை அவசியம்.
.
புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார்.
ஏராளமான விண்ணப்பதாரர்கள் பல தசாப்தங்கள் பழமையான தேசிய அடையாள அட்டைகளையே வைத்திருப்பதாக அறியப்படுகிறது, மேலும் பாஸ்போர்ட் பெற தேவையான ஆவணங்களுடன் ஒட்டப்பட்ட புகைப்படம் வண்ண புகைப்படத்துடன் பழைய அடையாள அட்டை புகைப்படங்கள் பெரிதும் வேறுபடுகிறன என்றார்.

பழைய தேசிய அடையாள அட்டைகள் எண்கள் கூட தெரியாத அளவுக்கு சிதைந்து கிடப்பதால் இந்த நடைமுறை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தை இக்கட்டான நிலைக்கு தள்ளியுள்ளது
கடந்த இரண்டு வருடங்களில் பொலிஸ் மற்றும் விமான நிலைய அதிகாரிகளால் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு (SLBFE) 523 போலி கடவுச்சீட்டுகள் பதிவாகியுள்ளதாக என்றும் அவர் கூறினார்.
எனவே புதிய தேசிய அடையாள அட்டை (NIC) இல்லாத விண்ணப்பதாரர்களுக்கு கடவுச்சீட்டு வழங்குவதில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தீர்மானித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.