Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தலைவர் பிரபாகரனுக்கு முதன்முறையாக வீரவணக்கம்; சகோதரர் அறிவிப்பு..

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் உலகெங்கிலும் தற்போது வரை பேசுபொருளாகவே காணப்படுகின்றது.

தலைவர் பிரபாகரனுக்கு முதன்முறையாக வீரவணக்கம்; சகோதரர் அறிவிப்பு.

 

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மரணம் உலகெங்கிலும் தற்போது வரை பேசுபொருளாகவே காணப்படுகின்றது.

2009 ஆம் அண்டு இறுதி யுத்தத்தில் பிரபாகரன், அவரது  பிள்ளைகள் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு ஒன்றில் வாழும் பிரபாகரனின் அண்ணன் மனோகரன் தமிழ்நாட்டின் தந்தித் தொலைக்காட்சிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த அவர்“2009 ஆம் அண்டு மே 18 ஆம் திகதி இறுதி யுத்தத்தில் பிரபாகரன் உயிர் நீத்ததாக இலங்கை இராணுவம் அறிவித்திருந்தது.

அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்ட இந்த நாளில் டென்மார்க்கில் பிரபாகரனுக்கு முதன்முறையாக வீர வணக்கநிகழ்வு நடைபெறவுள்ளது.பிரபாகரன் பெயரில் இடம்பெறும் மோசடிகள் மற்றும் அவரது வாழ்க்கை பிழையாக சித்தரிக்கப்படுவதை தடுக்கும் நோக்கில் வீரவணக்க நிகழ்வு நடத்தப்படவுள்ளது.

விடுதலைப்புலிகள் அமைப்பு இதுவரை பிரபாகரனுக்கோ, அவரது குடும்பத்துக்கோ வீர வணக்கம் செலுத்தியதில்லை” என மனோகரன் தெரிவித்துள்ளார்.