Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் - பகுதி -13.மார்ச்1 இலங்கை குற்ற நீதிமன்றம் நடைமுறைக்கு வந்தது.

1900 சனவரி 1 பொது சேமக்காலைகளில், புதைத்தல் குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தது.

1898 நவம்பர் 2 கொழும்பு பதிவாளர் நாயகம் காரியாலயத்தை சேர்ந்த திரு.பி.பிரான்சிஸ் மட்டக்களப்பு நிலப்பதிவு காரியாலய பதிவாளராகவும், மட்டக்களப்பு பதிவாளர் திரு. காராளசிங்கம் யாழ்ப்பாணக் காரியாலய பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

நவம்பர் வவுனியா மாவட்டத்தின் சில பிரிவுகள் மன்னார், முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மாவட்டங்களுடன் இணைக்கப்பட்டன.
நவம்பர் காலம் சென்ற வண.பிதா மோருவாவின் ஆள் உயர ஓயில் பெயின்ற் படத்தை பிரபல்ய கலைஞர் ஜேம்ஸ் டி நியஸ் வரைந்து சென் ஜேம்ஸ் தேவாலயத்திற்கு அன்பளிப்பு செய்தார்.
நவம்பர் திரு கதிரவேற்பிள்ளை இலங்கை சிவில் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
நவம்பர்22 யாழ்ப்பாண அமெரிக்க மிசனைச் சேர்ந்த வண அஸ்பெரி பருத்தித்துறையில் காலமானார்.
நவம்பர்27 திரு.ரூவைனம் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

டிசம்பர்25 இலங்கைக்கும் ஐக்கியராட்சியத்திற்குமான தபால் முத்திரை செலவு 6 சதமாக நிர்ணயிக்கப்பட்டது.டிசம்பர் யாழ்ப்பாணக்கச்சேரி திரு. போல் முதலியாரின், சகோதரர் சந்திரயோகுப்பிள்ளையின் விதவை யாக்கோவா தங்கமுத்து காலமானார். இவர் நிக்கோலாஸ் சந்திரசேகர முதலியாரின் மகளாவார்.

1899  சனவரி 23   பிரபல்ய மாவட்ட இஞ்சினியர் வேலுப்பிள்ளை முதலியாரின் மூத்த மகன் குமாரவேலுப்பிள்ளை, நீரிழிவு நோயால் கந்தரோடையில் மரணமானார்.
சனவரி 24 யாழ் மறைமாவட்டத்தை சேர்ந்த வணபிதா நேரபேட் பெரேரா, கொழும்பு பேராயரால் பொறளை தேவாலயத்தில் குருவளவாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

1899 பெப்ரவரி 6 யாழ்ப்பாண சுகாதார சேவையில், துப்பரவுப் பிரிவின் நீண்டகால அத்தியட்சகர் நவரட்ணசிங்கி கொழும்பில் காலமானார்.
பெப்ரவரி 10 மன்னார் கச்சேரி 2வது லிகிதர், திரு.   நிக்கோலஸ் புவிராஜசிங்கம் மன்னாரில் காலமானார்.
பெப்ரவரி 14 யாழ்ப்பாணக் கத்தோலிக்க மிசன் கார்டியன் பத்திரிகையில் 23 ஆண்டுகளாக வேலை செய்த திரு. டீ. கிறிஸ்டியன் காலமானார். இவர் காலம் சென்ற வண.பிதா கிறிஸ்சோஸ்திரத்தின் சகோதரராவார்.
பெப்ரவரி 18 யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் திரு. திருமதி லிவர்ஸ், ஒரு ஏற்பாடு செய்யப்பட்ட «விருந்து அற்கோம்' நிகழ்வு நடாத்தினர்.
பெப்ரவரி 25 யாழ்ப்பாண மக்களுக்கு ஓர் நகர மண்டபம் அமைப்பதற்காக, ஒரு பொதுக்கூட்டம் அரச அதிபர் திரு லிவர்ஸ் தலைமையில் நடாத்தப்பட்டது.

மார்ச்1 இலங்கை குற்ற நீதிமன்றம் நடைமுறைக்கு வந்தது:

ஏப்ரல்9 செரூபீம் முதலியாரின் விதவை இச பெல்லா யாழ்ப்பாணத்தில் காலமானார்.
ஏப்ரல்11 முல்லைத்தீவிற்கு அருகே ஒரு சுதேச பாய்க்கப்பல் உடைந்து மூழ்கிப் போயிற்று.
ஏப்ரல்  மட்ராஸ் பல்கலைக கழகத்தில் எம்.பி.பி.எஸ் பட்டம் பெற்று டாக்டர் அல்பிரட் சு லாட்ஸ்    திரும்பினார்.

மே4 யாழ்ப்பாண நீதி மன்றத்தில் வழக்கறிஞராக நீண்ட காலம் வேலை செய்த அல்பிரட் கென்ஸ்மான் காலமானார்.
மே15. பிரபல்ய வர்த்தகர் ஜே.ஐ பீரிஸ் யாழ்ப்பாணத்தில் காலமானார்.

யூன்1 காலம் சென்ற  செவாலியர் சவிரிமுத்து முதலியாரின் மகள்  செல்வி   மேரி  சவிரிமுத்து   யாழ்ப்பாணத்தில் காலமானார்.
யூன்8 சுண்டுக்குளி சென் ஜோன்ஸ் கல்லூரி அதிபர் வண ஜோன் கார்ட்டரின் மனைவி மேரி, காய்ச்சலால் மரணமானார்.
யூன்11 யாழ்ப்பாணம் சென் மேரி பேராலயத்தை திருத்துவதற்கு நிதி சேர்க்கும் முகமாக வண.பிதா கொலின்ஸ்,   குரு  முதல்வர  தலைமையில், சென் பற்றிக்ஸ்   கல்லூரி  மண்டபத்தில் ஓர் கூட்டம்  நடைபெற்றது.

யூலை28 திருகோணமலை  நீதிமன்ற செயலாளர், சிமோன் செருபிம்  முதலியார் திருமலையில் மரணமானார்.
யூலை29 யாழ்ப்பாண சுங்க சிறாப்பர் ஜோன் காராளசிங்கம் மரணமானார்.
யூலை29 வண காஸ்ரிக்ஸ் நினைவாக ஓர் பெண் பாடசாலை யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது

ஆகஸ்ட்10 கல்விமானும் பண்டிதருமான சு. தியாகர் நல்லூரில் மரணமானார்.
ஆகஸ்ட் 11  நிக்லாஸ்  புவிராஜசிங்கி  முதலியாரின்  மூத்த மகளும்  ஞானமுத்து  வர்த்தகரின்  மனைவியுமான விக்டோரியாபிள்ளை காலமானார்.
ஆகஸ்ட்11 கண்டி சென் ,அந்தனிஸ்  ஆச்சிரமத்தில் மடாதிபதியும் இலங்கை அப்போஸ்தலிக்க திருச்சபையில் நீண்டகாலம் செயலாற்றியவருமான அதி.      வண மடாதிபதி சிப்கோலனி சில்வெஸ்ரின், இத்தாலி லொறாந்ரோவில் காலமானார்
ஆகஸ்ட் யாழ்ப்பாணம் - மல்லாகம் பொலிஸ் மாஜிஸ்றேற் பதவியில் திரு . தம்பு  அரசாங்கத்தால்  நிரந்தரமாக   நியமனம் வழங்கப்பட்டார்.

1899 பெப்ரவரி 11 உயர்நீதிமன்ற தமிழ் மொழிபெயர்ப்பாளர் கைலாசபிள்ளை முதலியாரின் மனைவி காலமானார். இவர் காலம் சென்ற தம்பிப்பிள்ளை மேற்பார்வையாளரின் மகளாவார்.

செப்டம்பர் சட்டவாளர் கதிரவேலுவின் சகோதரனும், சட்டவாளர் காசிப்பிள்ளையின் மருமகனுமாகிய கனகரத்தினம் சட்டப்பரீட்சையில் சித்தி எய்தினார்.
செப்டம்பர்  முல்லைத்தீவு, வவுனியா  ஆகியவற்றிற்கான சாராயக்  குத்தகையை  முறையே 14500,8160 ரூபா கட்டி சூசைப்பிள்ளை எடுத்துக் கொண்டார்.

ஒக்டோபர் 1 யாழ்ப்பாணம் பிரிமியர் ரெஸ்ரோரண்ட் திரு டொன் மனுவேல் நிர்வாகத்தின் கீழ் திறக்கப்பட்டது.
ஒக்டோபர் 4 யாழ்ப்பாணம் கச்சேரி தபாலதிபர் பிலிப்பையா காலமானார்.
ஒக்டோபர் 4 கொழும்பிலிருந்து வடக்கே யாழ்ப்பாணத்தை இணைக்கும், ரயில் பாதை அமைப்பதற்கு, அரச செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார் என சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.
ஒக்டோபர் 5 நீதிபதி அரியநாயகம் பிள்ளையின் மகளும், சி.ஆர் அரசரத்தினம் மனைவியுமான ஏஞ்சலீனா திருவாந்திரத்தில் காலமானார்.
ஒக்டோபர் 8 சுதேச வைத்தியர் ராமுப்பிள்ளை வண்ணார்பண்ணையில் மரணமானார்.
ஒக்டோபர் 12, 27 வருடங்கள் குருவானவராக யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, ஊர்காவற்துறை மற்றும் பிரதேசங்களில் பணியாற்றிய வண பிதா.துறுசா 52வது வயதில் காலமானார்.
ஒக்டோபர் 12 நில அளவை இலாகாவைச் சேர்ந்த  திருவாளர்கள் சிப்ரன், ஸ்பெல்  வின்,கெலன்பேர்க், கோக் கிறகறி  ஆகியோர்  வட பகுதி, களனி  பகுதி ரயில்வே பாதைகளை கட்டுவதற்கும், பிரதான இஞ்சினியர் திரு ஒலிவர் வடபகுதி தண்டவாள பாதை நிலம் பிரிக்கவும் கொழும்பு வந்து சேர்ந்தனர்
ஒக்டோபர்  சுந்தரம் உடையார் புற்றுநோய் காரணமாக சுண்டிக்குளியில் மரணமடைந்தார். இவர் பண்டிதர் தியாகரின் மைத்துணர் ஆவார்.
ஒக்டோபர் யாழ்ப்பாண ரயில் பாதை வேலைக்கு தேவையான பொருட்கள் கொழும்பை வந்தடைந்தன.
ஒக்டோபர்7 யாழ்ப்பாணத்தில் இரண்டு வாரம் தங்கி இருந்த வை.எம்.சி.ஏ இலங்கைச் செயலாளர் திரு. லூயிஸ் ஏரிப் கொழும்பு திரும்பினார்.

நவம்பர் 27 வர்த்தகர் டொன் கென்றிக் அப்புகாமி பமுனுகம போபிட்டியாவில் மரணமடைந்தார்.

டிசம்பர் காலனிப் பொருளாளர் லியனல் எப். லீ தனது 54 வயதில் மரணமானார்.
டிசம்பர் 13  (எப்.என்.எஸ்) «தேவைக்கு உதவும் நண்பர்கள்» அமைப்பின் பங்காளர் கிளை யாழ்ப்பாணம் கச்சேரியில் நடாத்திய பொதுக்கூட்டத்தில் யாழ்ப்பாண எப்.என்.எஸ் வைத்தியசாலையை அரசிடம் ஒப்படைக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் வரலாற்றுக் குறிப்புகள் – பகுதி 13

1900 சனவரி 1 பொது சேமக்காலைகளில், புதைத்தல் குறித்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. சிறிய நகரங்கள   ; சுகாதாரச் சட்டம் 1892  இன் கீழ்   பருத்தித்துறை நகரம்   கொண்டுவரப்பட்டது.

சனவரி  4   குருநாகலில்  இருந்து காங்கேசன்துறைக்கு ரயில்  பாதை   நிர்ணயிக்கும்   கேள்விப் பத்திரங்களை முடிக்குரிய அரச பிரதிநிதிகள் வழங்கினர்.
சனவரி5 யாழ்ப்பாண பிரசித்த நொத்தாரிசு திசவிரசிங்கி ஏபிரகாம் முதலியார் 92 ஆவது வயதில்  மரணமானார்.

பெப்ரவரி 9 இலங்கையிலும் இந்தியாவிலும் ஓர் நில அதிர்வு உணரப்பட்டது.

மார்ச் 21 யாழ்ப்பாண எப்.என்.எஸ் வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிபுணர் டாக்டர் வில்லியம் போல் மரணமானார்.

மே  இலங்கையில்  முத்துக்குளிக்கும்  தொழில் பற்றிய வரலாற்று அறிக்கையை கவர்னர் சேர் ரூவைனம் அரசிடம் சமர்ப்பித்தார்.

ஒக்டோபர் 27 பாம்பு கடித்ததால், ரயில்வே இஞ்சினியர் எல்.எப் வைற்   யாழ்ப்பாணத்தில்  மரணமானார்.

டிசம்பர  ;  26சென்பற்றிக்ஸ் கல்லூரியின்  பொன்விழா கொண்டாடப்பட்டது. 'சென்றல்' எனப்படும் யாழ்ப்பாண வெஸ்லியன் மத்திய கல்லூரியின் சஞ்சிகை வெளியிடப்பட்டது.

1901 சனவரி 22 மாட்சிமை தங்கிய விக்டோரியா மகாராணி காலமானார்.
சனவரி  23 மாட்சிமை தங்கிய 7ம் எட்வேர்ட் அரசனாகவும், சக்கரவர்த்தியுமாக அதிகார பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
சனவரி 27 இளம், ஊக்கமான வர்த்தகர் லீனஸ் மரியாம்பிள்ளை கொழும்;பில் மரணமானார்.

பெப்ரவரி 2 மாட்சிமை  தங்கிய மகாராணியின் ஈமக்கிரிகைகள் தொடர்பான பொது நிகழ்வுகள் இலங்கைத்தீவு பூராவும் நடந்தன.
பெப்ரவரி2 மட்டக்களப்பு வர்த்தக கம்பனி உருவாக்கப்பட்டது.
பெப்ரவரி    கொழும்பு  ஆயரினால் சுண்டுக்குளியிலபுதிதாகக்  கட்டப்பட்ட சென் ஜோன்ஸ் கல்லூரி மண்டபம் திறக்கப்பட்டது.

மார்ச்1 4வது தசாப்த இலங்கை குடிசனத்தொகை கணக்கிடப்பட்டது. மொத்த சனத்தொகை 35 6  5 954. வட மாகாண சனத்தொகை 340,936 யாழ்ப்பாண சனத்தொகை 35879 ஆண்கள் 1896212, பெண்கள் 1669742.

மே 28 திரு. டி. நோமன் யாழ் மத்திய கல்லூரியின் உதவி அதிபராக பொறுப்பேற்க வந்தார். இது இரண்டு ஐரோப்பியர்கள் இந்த ஸ்தாபனத்தில்  வேலை செய்தமை இதுவே முதற் தடவையாகும்.

யூன் பிங்பொங் விளையாட்டு இலங்கையில் முதன் முதலாக அலிமுகப்படுத்தப்பட்டது.
யூன் 3 ஜெனரல் ஒலிவர் யாழ்ப்பாண வெஸ்லியன் மத்திய கல்லூரிக்கு விஜயம் செய்தார்.
யூன் 6 யாழ் கச்சேரி பிரதம முதலியார் எஸ் பஸ்ரியாம்பிள்ளை முதலியார் காலமானார்.

யூலை 14 யாழ்ப்பாண அரச அதிபர் லீவர்ஸ் இன் மனைவி வவுனியாவில் எதிர்பாராத விதமாக ஓர் கரடியை எதிர் கொண்டார். கரடியை விரட்டும் முயற்சியில் அவரின் சேவகர் தவறுதலாக சுடப்பட்டார்.

ஒக்டோபர் யாழ்ப்பாண விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டது.
ஒக்டோபர் 25 பவுண் எனப்படும் தங்க நாணயம் சட்ட பூர்வமாக  விற்கப்பட்டது. அதன் பெறுமதி 15ரூபாயாகும்.

1902 சனவரி20 மன்னார் கடல் படுக்கையில் முத்துச்சிப்பிகள் பற்றி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு பேராசிரியர் வி.சு.கேர்ட்மான் தனது உதவியாளர் திரு. கேர்ணல் உடன் கொழும்பு வந்தார்.
சனவரி அரச ஊழிர்களுக்குக்; காணி விற்பனை, மற்றும்  ஓய்வூதியப் பணம் சம்மந்தமான சட்டங்களும், ஒழுங்கு முறைகளும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.

பெப்ரவரி 8  யாழ்ப்பாணத்திற்கு ரயில்வே பாதை போட்டது குறித்து சேர் வெஸ்ற்றிச்வேக்கு ஓர் நினைவுக்கல் நாட்டுவது குறித்து பருத்தித்துறையில் திரு. ஆர். வி. அழகக்கோன் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
பெப்ரவரி  மாட்சிமை பொருந்திய  சேர் வெஸ்ற்  றிச்வேக்கு நினைவுக்கல் நாட்டுவதற்கு, நிதி சேகரிக்கவென ஓர் பாதசாரி இயக்கம் ஆரம்பிக்கப்பட்டது.

மார்ச்10 திரு. றிச்வே யாழ்ப்பாணம் வந்தார்.
மார்ச்11 காங்கேசன்துறையில் இருந்து யாழ் சாவகச்சேரி வரை 21 மைல்கள் ரயில் பாதையை  சேர். வெஸ்ற் றிச்வே  திறந்து வைத்தார்.

மே திருவாங்கூர் ஓய்வு பெற்ற நீதிபதி செல்லப்பாபிள்ளை வண்ணார்பண்ணையில் காலமானார்.

யூன் 20 நெடுந்தீவு  மக்களால்  நியமிக்கப்பட்ட குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட  கிராம குழுக்கள் சட்டம் 1889, கிராம சட்டவிதிகளின் கீழ் பிரசுரம் செய்யப்பட்டது.
1902 யூன் 25 மாட்சிமை தங்கிய அரசர் நோய்வாய்பட்டார் என்ற செய்தி அறிவிக்கப்பட்டது. அவருடைய முடிசூட்டு விழா நிறுத்தப்பட்டது.

யூலை25 யாழ்ப்பாணத்தில் விவசாய கண்காட்சி இடம்பெற்றது.

ஆகஸ்ட் 9 இந்து மத வெறியர்களால் பட்டபகலில் தின்னவேலியில் உள்ள றோமன் கத்தோலிக்க பாடசாலை தாக்கி அழிக்கப்பட்டது.

செப்டம்பர் 5  வடபகுதி ரெயில் பாதை சாவகச்சேரியில் இருந்து பளைவரை (14மைல்) திறந்து வைக்கப்பட்டது.
செப்டம்பர் 5 யாழ்ப்பாணத்தில் ஓர்  கண்காட்சி ஆரம்பிக்கப்பட்டது.

ஒக்டோபர்  9 « இலங்கை கத்தோலிக்க சங்கம் » அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

டிசம்பர்21 தென் ஆபிரிக்க ' போர்' கைதிகள்  இலங்கையில் இருந்து தென்னாபிரிக்காவிற்கு திருப்பி   அனுப்பப்பட்டனர்.
டிசம்பர்  வெள்ளைச் சுண்ணாம்புக் கல்லில் செதுக்கப்பட்டு புதைந்து கிடந்த புத்தர் சிலை, சுண்ணாகத்தில் கண்டெடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

1903 சனவரி 20 கொழும்பில் ஆசிரியர் பயிற்சி கலாசாலை ஆரம்பிக்கப்பட்டது.
சனவரி முதன் முதலாக இலங்கைக்கு மோட்டார் சைக்கிள் இறக்குமதி செய்யப்பட்டது.
1903 சனவரி கௌரவ பொன் ராமநாதன் அரச ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.

மார்ச்1 மறிச்சுக் கட்டியில் ஓர் முத்துக்குளிப்பு நிலையம் ஆரம்பிக்கப்பட்டது.
மார்ச்25 கவர்னர் முத்துக்குளிப்பு நிலையத்திற்கு விஜயம் செய்தார்.

ஏப்ரல் 1 பரிசுத்த பாப்பாண்டவர் 13ம் லீயோவின் வெள்ளிவிழாவை இலங்கை கத்தோலிக்கர்கள் கொண்டாடினர்.

யூன் 9 அனுராதபுரத்தில் பௌத்த யாத்திரிகர்கள் கத்தோலிக்க கோவில்களையும், குருவானவரையும் தாக்கி பெரும் சேதத்தை விளைவித்தனர். 40 கிளர்ச்சிக்காரர்களுக்கெதிராக வழக்கு நடந்து 1முதல் 7வருடம் வரை சிறைத்தண்டனையும், அபராதமும் விதிக்கப்பட்டது.
யூன் 13 இலங்கை சட்டசபை சீர்திருத்தங்கள், பொது ஐரோப்பிய  பிரதிநியான  கௌரவ   பேர்க்குசனால் அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விடயம் சட்டசபையில் ஆராயப்பட்டது.
யூன் மட்டக்களப்பு கச்சேரியின் பிரதம முதலியார் சிற். கைலாசபிள்ளை மேதகு கவர்னரின் பிரதம தமிழ் மொழி பெயர்ப்பாளராக நியமிக்கப்பட்டார்.
யூன் இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும், நோக்குடன் 'பாம்பன் பாலம்' திட்டமும் கால்வாய் திட்டமும், அகண்ட ரயில்வே பாதையுடன் முன்மொழியப்பட்டது.
யூலை9 யாழ்ப்பாண இந்து இளைஞர் மாமன்றம் ஆரம்பிக்கப்பட்டது.

ஆகஸ்ட் கௌரவ  டாக்டர் கபிரியேல் றொக்வூட், மீண்டும் தமிழர் பிரநிதியாக சட்டசபைக்கு தெரிவானார்.

ஒக்டோபர் 2 யாழ்ப்பாணம் நீராவிக்கப்பல்-கம்பனியின் கப்பல் « யாழ்ப்பாணம் எஸ்.எஸ் » தனது பரீட்சார்ந்த பயணத்தை ஆரம்பித்து
ஒக்டோபர் 14 « எஸ். எஸ் யாழ்ப்பாணம் » தனது உல்லாச பயணத்தை நெடுந்தீவு நோக்கி செய்தது.
ஒக்டோபர் 15 யாழ்ப்பாண உப்பளம் 1904 ஆண்டிற்கான குத்தகை 63,521 ரூபாவிற்கு ராமன் செட்டிக்கு கொடுக்கப்பட்டது.
ஒக்டோபர் 17 யாழ்ப்பாணத்திற்கு புகையிரத சேவை வழங்கியதன் நினைவாக, சேர் வெஸ்ட் றிச்;வே பேரில் யாழ்ப்பாண முத்தவெளியில் றிச்;வே அரங்கை நிரந்தரமாக அமைப்பதற்கான முடிவு யாழ் உதவி அரச அதிபர் லூயிஸ் தலைமையில் யாழ் நீதிமன்ற வளவில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

ஒக்டோபர் 27 இலங்கையில் இருந்து திரும்பி செல்லவுள்ள மேதகு சேர் வெஸ்ட் றிச்வேக்கு அவர் செல்வதற்கு  முதல் நாள் அளிக்கப்படவுள்ள பிரியாவிடை நிகழ்விற்கு, யாழ்ப்பாண மக்களின்  பிரநிதியாக வழக்கறிஞர் திருநாவுக்கரசு, யாழ் பொது நூலகத்தில் நடந்த கூட்டத்தில் தெரிவு செய்யப்பட்டார்.

நவம்பர் 18 இந்தியாவிலிருந்து 40000 அந்தர் உப்பு  'சில்லா' நிராவிக்  கப்பலில் கொண்டு வரப்பட்டது.
1903 நவம்பர் 18 சேர் றிச்வே குடும்பம் இலங்கையை விட்டு வெளியேறியது.
நவம்பர் ரி.சி. சங்கரப்பிள்ளை அரச சட்டத்தரணியாக யாழ்ப்பாணத்திற்கு நியமிக்கப்பட்டார்.

டிசம்பர் 1 யாழ்ப்பாணம் இளம் இந்து இளைஞர் மன்றத்தின் எற்பாட்டில், சட்டதரணி சு. கனகரத்தினம் இந்துக்கல்லூரியில் 'சமூகக் கொடுங்கோன்மை' என்னும் தலைப்பில் ஓர் உரை நிகழ்த்தினார்.
டிசம்பர் 3 மேதகு சேர் கென்றி பிளேக், இலங்கையின் கவர்னராக  பொறுப்பேற்க   கொழும்பு வந்து  சேர்ந்தார்.
டிசம்பர் 31 ஆர்.எச்.லீம்புறுக்கன், வடமாகாண பாடசாலை பரிசோதகர் ஓய்வு பெற்றார்.

1904  சனவரி 1  வண்ணார்பண்ணை தபால் கந்தோர், டாக்டர் சிவப்பிரகாசத்தின் வீட்டிற்கு இடம் மாற்றப்பட்டது.
சனவரி 5   திரு.   தம்புவைத் தொடர்ந்து, யாழ்ப்பாண பொலிஸ் மாஜிஸ்திரேட் ஆக திரு. றுசல் நியமிக்கப்பட்டார்.
1904  சனவரி  26  பொது  விடயங்களில்  உண்மையாகவும், கண்ணியமாக நடந்த திரு. ஆர் மயில்வாகனம் சட்டத்தரணி, மல்லாகத்தில் காலமானார்.
சனவரி பளையில் இருந்து செம்பியன்பற்றுக்கு 3 மைல் புதிய தரைப்பாதை திறந்துவிடப்பட்டது.
சனவரி யாழ்ப்பாணத்திற்கென ஓர் உள்ளுர் சபையை திரு. லூயிஸ் சிபாரிசு செய்திருந்தார்.

பெப்ரவரி 1 திரு. ஜோன் றுட் யாழ்ப்பாணத்தை விட்டு விலகிச்சென்றார். அவர் விடைபெறுவதற்கு முதல் நாள், யாழ்ப்பாண பொலிசாரும், சுங்க அதிகாரிகளும் அவருக்கு பிரியாவிடை விருந்தளித்தனர். அவர் யாழ்ப்பாணத்தில் நீண்ட காலம் சேவை செய்த ஓர் பாராபட்சமற்ற அதிகாரியாவார்.
பெப்ரவரி 22 வலிகாமம் மணியகாரர் திரு. என் துரைச்சாமி உடுப்பிட்டியில் காலமானார்.
பெப்ரவரி காங்கேசன்துறை   துறைமுகத்தில் 32 ஆண்டுகள்  சேவை செய்த டாக்டர் பரராசசிங்கம், துறைமுக வைத்திய அதிகாரி ஓய்வு பெற்றார்.
பெப்ரவரி மலேரியா போன்ற ஒருவகை காய்ச்சல் குடாநாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

மார்ச் நெடுந்தீவில் தபால் கந்தோர் திறக்கப்பட்டது.
மார்ச்  யாழ்ப்பாணத்திற்கு  தேவையான  நன்நீரைப் பெறுவதற்காக, தின்னவேலியில் தோண்டப்பட்ட கிணறு வேலைகள் முடிவடைந்தன.
மார்ச் 31 நல்லூரில் டாக்டர் கந்தையா மரணமானார்.

ஏப்ரல் 6 பருத்தித்துறை, சாவகச்சேரி ஆகியவற்றிற்கு விண்ணப்ப ஆணையாளராகவும் பொலிஸ் மாஜிஸ்திரேட் ஆகவும் வழக்கறிஞர் ஆம்ஸ்ரோங் தளையசிங்கம் நியமிக்கப்பட்டார்.
ஏப்ரல் 14 மூத்த வழக்கறிஞரும், இலங்கை சட்டதரணிகள் சங்க உறுப்பினரும் ஊர்காவற்துறை பொலிஸ் மாஜிஸ்திரேட்டுமான திரு. கந்தையா நல்லூரில் மரணமானார்.
ஏப்ரல் 19 சட்டசபையில் தமிழர் பிரதிநிதியான டாக்டர் றொக்வூட் இங்கிலாந்து பயணமானார். அவரின் இடத்திற்கு வழக்கறிஞர் ஆசுரப்பா நியமிக்கப்பட்டார்.
1904 ஏப்ரல் திருவாளர்கள் அப்துல் காதர், நைல்ஸ், குழந்தைவேலு ஆகியோர் வழக்கறிஞர் இறுதிப் பரீட்சையில் சித்தியெய்தினர்.
ஏப்ரல் தஞ்சாவூர் கலக்டர் 'பகதூர்' முருகேசபிள்ளையின் மருமகன் வைத்தியலிங்கம் யாழ்ப்பாணத்தில் சட்டத்தரணியாக வேலை செய்யத்தொடங்கினார். அப்போது யாழ்ப்பாணத்தில் மொத்தம்           40 சட்டத்தரணிகள் இருந்தனர்.

மே 14 வண்ணார்பண்ணை சிவன்கோவிலின் முன்னே பெரும் கலவரம் நடந்தது.
மே யாழ்மாவட்ட நீதிபதியாக திரு. பிறிமான் பொறுப்பேற்றார்.
மே  ஒவ்வொருநாளும் மதியம் 12 மணிக்கு யாழ் கோட்டையிலிருந்து  ஒரு பீரங்கி வெடி வெடிக்கப்பட்டது.

யூன் 14  தென்மராட்சி மணியகாரர் திரு. சரவைணமுத்து முதலியார் கைதடியில் மரணமானார்.
யூன்  'எஸ்.எல் ஜப்னா நீர்க்கப்பல்'  சம்பந்தமாக, வோக்கர்ஸ் கம்பனிக்கும் யாழ்ப்பாண நீராவி போக்கு வரத்து கம்பனிக்குமிடையே வழக்கு ஆரம்பமாயிற்று.

யூலை 1 நாய்கள் குறித்த சட்டம் யாழ்ப்பாணத்தில் நடைமுறைக்கு வந்தது.
யூலை 13 இலங்கைக்கான முதலாவது வெகுசன நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் லோஜி தனது 73வது வயதில் இங்கிலாந்தில் காலமானார்.
யூலை 15 கனகசுந்தர முதலியார் ஈரல் நோய்காரணமாக கண்டியில் மரணமானார்.
யூலை 27 கொழும்பு சுங்க அதிகாரி சுந்தரத்தின் தந்தை கந்தர் காலமானார்.
யூலை வலிகாமம் கிழக்கு மணியகாரராக புத்தூர் கனகசுந்தர முதலியார் நியமிக்கப்பட்டார்.
யூலை கும்பகோணம் கல்லூரி நிர்வாகி ஜேம்ஸ் கென்ஸ்மான் காலமானார். இவர் வருடாந்தம் 12000 ரூபா சம்பளத்தில் வேலை பார்த்தார்.

ஆகஸ்ட்  மழை காலத்திலும், பனிக்காலத்திலும் யாழ்ப்பாணத்தில் மலேரியா காய்ச்சல் வருவதற்கான காரணங்கள் பற்றி ஆராய  டாக்டர் ஏ. சல்மர்ஸ் அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆகஸ்ட் யாழ்ப்பாணத்தில் மணியகாரர்களுக்கு சம்பளத்தை அதிகரிக்கும்படி அரச அதிபர் லூயிஸ் சிபாரிசு செய்தார்.
ஆகஸ்ட் டாக்டர் எஸ் சி போல் மதராஸ் பலகலைக்கழகத்தில் வைத்திய துறையில் கலாநிதி பட்டம் பெற்றார்.
ஆகஸ்ட் போதகர் ஜோ.பஸ்டியன் மட்டக்களப்பில் காலமானார்.

செப்டம்பர்  யாழ்ப்பாணம் பிரதான தெருவிலும்,பெரியகடையிலும் தெருவோர தபால் பெட்டி நாட்டப்பட்டது.
செப்டம்பர்  யாழ்ப்பாணத்தில் பிரபல்யமாக இருந்த வழக்கறிஞர் கூல்ட்டின் மனைவி மாத்தளையில் காலமானார்.
1904 செப்டம்பர் 1873ம் ஆண்டிலிருந்ததைவிட யாழ்ப்பாணத்தின் சமூக பொருளாதார நிலைமை பெரிதும் வளர்ச்சியடைந்து விட்டது.
செப்டம்பர் தென்மராட்சியின் மணியகாரராக மறைந்த சரவணமுத்து முதலியாரின் இடத்திற்கு முத்துக்குமாரசுவாமி நியமிக்கப்பட்டார்.

ஒக்டோபர்' சிலோன் ஒப்சேவர்' பத்திரிகையில் செயலாற்றிய திரு. வில்லியம் டிக்பி இங்கிலாந்தில் மரணமானார்.
1904 ஒக்டோபர் 8 நுரையீரல் நோயால் நாகநாதர் என்னும் 31 வயது இளைஞன் கொழும்பில் மரணமானார்.
ஒக்டோபர் 15 யாழ்ப்பாணம் தெருவரி ஒரு ரூபாயில் இருந்து 1,25 ரூபாக்கு கூட்டப்பட்டது.
ஒக்டோபர் 21 நில அளவையாளர் வேலுப்பிள்ளை வட்டுக்கோட்டையில் காலமானார்.
ஒக்டோபர் 30 என். சபாபதிப்பிள்ளை வண்ணார்பண்ணையில் காலமானார்.

நவம்பர் 1 வடபகுதி ரயில்வே அனுராதபுரம் வரையும் சேவைக்கு திறந்து வைக்கப்பட்டது.
நவம்பர் 5 கிழக்கு மாகாணத்தில் மூத்த வைத்திய அதிகாரி கோவிந்தனின் மனைவி தனது 71வது வயதில் காலமானார்.
நவம்பர் 9 முதலியார் சபாரட்ணம், யாழ்ப்பாணக் கச்சேரியின் பிரதம முதலியாராக நியமிக்கப்பட்டார்.
நவம்பர் 29 ஐயம்பிள்ளை வைத்தியலிங்கம்பிள்ளை அராலியில் காலமானார்.
நவம்பர் பிரசித்த நொத்தாரிசு கந்தப்பசேகரர் நல்லூரில் காலமானார்.

டிசம்பர் 23 மட்டக்களப்பில் குருமடத்தில் ஆசிரியராக இருந்த வைஸ்போர்ன்  போக் அராலியில் காலமானார்.
டிசம்பர் சென் லூயிசில் நடந்த கண்காட்சிக்கு சுருட்டு, புகையிலையை அனுப்பி வைத்த பிரபல்ய வர்த்தகர் பி. சுவாம்பிள்ளை, தங்கப்பதக்கம் வென்றார்.  

 "வரலாறு எமது வழிகாட்டி "   - மனோகரன் மனோரஞ்சிதம் - எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -

"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -

"வரலாறு எமது வழிகாட்டி " - மனோகரன் மனோரஞ்சிதம் -