Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ள 3000 இலங்கையர்கள்!

,

அமெரிக்காவினால் நாடு கடத்தப்படவுள்ளவர்களின் பட்டியலில் 3000 இலங்கையர்களும் உள்ளனர் என அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

2024 நவம்பர் 24ம் திகதி வரை நாடு கடத்துவதற்கான இறுதி உத்தரவிற்காக காத்திருக்கும், இதுவரை தடுத்துவைக்கப்படாத இலங்கையர்களின் எண்ணிக்கை 3065 எனவும் குறித்த பிரிவு தெரிவித்துள்ளது.

சட்ட மற்றும்  ஏனைய சவால்கள் காரணமாக அனைவரையும் உடனடியாக நாடு கடத்த முடியாது, புகலிடக்கோரிக்கைகள் காரணமாகவும் நாடு கடத்துவதில் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாக குறித்த பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அனைத்து நாடுகளும் குடியுரிமை குறித்து ஆராயவேண்டும், பயண ஆவணங்களை வழங்கவேண்டும்,

நாடு கடத்தப்பட்ட சட்டவிரோத குடியேற்றவாசிகளுடன் வரும் விமானங்களை ஏற்கவேண்டும் என அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும் அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாடு கடத்தியவர்களுடன் வரும் விமானங்களை ஏற்க மறுக்கும் நாடுகளையும், அமெரிக்காவின் குடிவரவு மற்றும் சுங்க அமுலாக்கல் பிரிவு பட்டியலிட்டுள்ளது.

 எனினும் இந்த பட்டியலில்  இலங்கை இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.