Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இலங்கைத் தமிழர் நோர்வேயில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்!

பொலிஸார் தீவிர விசாரணை.

நோர்வேயில் காரில் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கை தமிழர்: பொலிஸார் தீவிர விசாரணை.

நோர்வேயில் இலங்கைத் தமிழர் ஒருவர் காரில் இருந்து எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 36 வயதான இரண்டு பிள்ளைகளின் தந்தை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெலிங்கன் நகராட்சியில் உள்ள Myrdammen என்ற இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை எரிந்த காரில் இருந்து அவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்த வழியாக நடந்துச் சென்ற ஒருவர் வழங்கிய முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

எவ்வாறாயினும், குற்றம் எதுவும் நடந்ததாக தகவல் கிடைக்கவில்லை என பொலிஸ் பணித் தலைவர் கெட்டில் லண்ட் தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த காரின் உரிமையாளரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், சம்பவம் இடம்பெற்ற இடத்தில் குற்றவியல் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வுகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த மரணத்தை சந்தேகத்திற்குரியது என தெரிவித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.