Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

செஞ்சூரியன் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு ஈழத்தமிழர்களின் செவ்வஞ்சலி!

இந்திய மக்களை மாத்திரமல்லாமல் ஈழத்தமிழர்களையும் நெஞ்சிருத்தி வாழ்நாள் பூராவும் செஞ்சூரியனாக ஒளிர்ந்த நல்லணக்கண்ணு

செஞ்சூரியன் தோழர் நல்லகண்ணு ஐயாவுக்கு ஈழத்தமிழர்களின் செவ்வஞ்சலி!
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புகழ்பூத்த மூத்த பெரும்தலைவர் தோழர் இ.நல்லகண்ணு ஐயா அவர்கள் தனது 101 ஆவது வயதில் தனது மூச்சை நிறுத்திக் கொண்டார் என்ற செய்தி ஈழத் தமிழ் மக்களைப் பெரும் துயரில் ஆழ்த்தியுள்ளது.
2009-ஆம் ஆண்டு தமிழ்த் தேசத்திற்கு எதிராக ஸ்ரீலங்கா அரசு (Srilanka State) ஈவிரக்கமற்ற யுத்தத்தை நடத்தித் தமிழினப் படுகொலையை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது தமிழகம் அதற்கெதிராகக் கொந்தளித்தது. அப்போது, தமிழகத்தின் பல்வேறு கட்சிகளையும் ஒருங்கிணைத்து மக்களை ஒன்று திரட்டிப் பெரும் போராட்டங்களை நடத்திய 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தை' தோற்றுவித்ததில் நல்லக்கண்ணு ஐயா ஆற்றிய பங்கு அளப்பரியது. அதுமட்டுமல்லாது, ஐதராபாத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்றபோது ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியதில் முன்னின்று உழைத்த பெருமகனார் நல்லக்கண்ணு ஐயாவை நாம் இன்று கனத்த இதயத்துடன் நினைவிற் கொள்கிறோம்.

அரசியல் அடக்குமுறைகளுக்கும், பெரும் பண்ணையார்களின் குடியானவர்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கும், சாதியத் தீண்டாமைகளுக்கும் எதிராக எண்ணற்ற பெரும் போராட்டங்களை முன்னின்று நடத்தியமைக்காக ஏழு ஆண்டுகாலம் கொடும் சிறைவாசம் அனுபவித்தவர். சிறைவாசம் அவரது கொள்கை உறுதியை மேலும் புடம் போட்டது. விடுதலையான பின்பு முன்பை விட சமத்துவ சமுதாயம் காண்பதற்கு வேகமாகயும் தீவிரமாகவும் அவர் களப்பணியாற்றியதை உலகத் தமிழர்கள் என்றும் நினைவிற் கொள்வார்கள்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக ஒருவர் இரண்டு முறை மட்டுமே பொறுப்பு வகிக்க முடியும். ஆனால், நல்லக்கண்ணு ஐயாவின் நேர்மை, எளிமை, உறுதி, தன்னலமற்ற தியாக வாழ்வு ஆகியவற்றைக் கருத்திற்கொண்டு கட்சியின் சட்டவிதியை அகில இந்திய மாநாடு திருத்தியமைத்து அவர் நான்கு முறை பதவி வகிக்க வைத்தது. கட்சியும் மக்களும் அவர் மீது பேரன்பு கொண்டிருந்த நிலையில் அவரால் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுப் பெரும் பதவிகளைக் கூடப் பெற்றிருக்க முடியும். ஆனால் பதவிகளை பெற்றிடவிரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து மறைந்தார். 
இந்திய மக்களை மாத்திரமல்லாமல் ஈழத்தமிழர்களையும் நெஞ்சிருத்தி வாழ்நாள் பூராவும் செஞ்சூரியனாக ஒளிர்ந்த நல்லணக்கண்ணு ஐயாவுக்கு தமிழ்த் தேசியப் பேரவையினராகிய நாம் ஈழத் தமிழ் மக்களின் சார்பில் எமது செவ்வஞ்சலியைச் சிரந்தாழ்த்தித் தெரிவித்துக் கொள்கிறோம்.