Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ இராணுவ நடவடிக்ககையில் 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா!

ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம் - பிராட் கூப்பர்

ஈரான் மீது அமெரிக்கா நடத்தும் ‘எபிக் ஃபியூரி’ இராணுவ நடவடிக்ககையில் ஈரான் கடற்படையில் இருந்த ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க் கப்பல்களை அழித்துவிட்டதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அணு ஆயுத தடுப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்ததால், அதன் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கடந்த மாதம் 28-ம் திகதி போர் தொடுத்தன. பதில் தாக்குதலில் இறங்கிய ஈரான், அமெரிக்க இராணுவ முகாம்கள் இருக்கும் வளைகுடா நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதால் மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ‘எபிக் ஃபியூரி’ ஒபரேஷன் நடத்தும் அமெரிக்க இராணுவ கமாண்டர் அட்மிரல் பிராட் கூப்பர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:
ஒபரேஷன் எபிக் ஃபியூரியின் முதல் 100 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவில் மிகப் பெரிய தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஈரான் மீது 24 மணி நேரமும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுவரை சுமார் 2,000 இலக்குகளை தாக்கியுள்ளோம். ஈரானின் வான் பாதுகாப்பு மோசமான அளவில் பாதிப்படைந்துள்ளது. ஈரானின் நூற்றுக்கணக்கான ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை அழித்துள்ளோம்.

ஈரான் கடற்படையை ஒட்டுமொத்தமாக அழித்துவிட்டோம். ஈரான் கடற்படையில் ஒரு நீர்மூழ்கி கப்பல் உட்பட 17 போர்க்கப்பல்கள் இருந்தன. அனைத்தையும் மூழ்கடித்துவிட்டோம். சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு தடையாக இருந்த ஈரானின் அனைத்து இடங்கள் மீதும் பி-2 குண்டு வீச்சு விமானங்கள், எப்-35 போர் விமானங்கள், டொமஹாக் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பிராட் கூப்பர் கூறினார்.