Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு படையெடுக்கும் மக்கள்; 3 நாட்களில் 6.40 லட்சம் பேர் பயணம்

.

பொங்கல் பண்டிகையை ஓட்டி சொந்த ஊர்களுக்கு மக்கள் பயன்படுகின்றனர்.

இதற்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. ரயில் முன்பதிவு நிரம்பிய நிலையில், பேருந்துகளிலும் மக்கள் பயணம் மேற்கொண்டனர்.

மக்கள் பயன்பாட்டிற்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகள் இயக்குகிறது. இதில் கடந்த 3 நாட்களில் மட்டும் 6.40 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

இது குறித்து போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில், 12.01.2025 அன்று மாலை 12 மணி நிலவரப்படி, 2,092 வழக்கமான பேருந்துகளுடன், 1,858 சிறப்பு பஸ்களையும் சேர்த்து மொத்தம் 3,950 பஸ்களில் 2,17,250 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

10.01.2025 முதல் 12.01.2025 இரவு 12 மணி வரை, மொத்தமாக 11,463 பஸ்களில் 6,40,465 பயணிகள் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் விவரங்கள்

பொங்கல் திருநாளை முன்னிட்டு கடந்த 10ஆம் தேதி துவங்கி 13ஆம் தேதி வரையில், சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2092 பேருந்துகளுடன், 5,736 சிறப்புப் பேருந்துகள் என மொத்தமாக, 14,104 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து மேற்கண்ட நாட்களுக்கு 7,800 சிறப்பு பேருந்துகள் ஆக மொத்தம் 21,904 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொங்கல் பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக 15ஆம் தேதி முதல் 19 வரை தினசரி இயக்கக் கூடிய 10,480 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், பல்வேறு ஊர்களுக்கு 6,926 என மொத்தம் 22,676 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

சென்னையிலிருந்து கிளம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து இயக்கப்படும்.