Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொள்ளையர்கள், கொலையாளிகள் எங்கள் ஆட்சியில் தப்பவே முடியாது!

.

“தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கள்வர்கள், கொலையாளிகள் தப்பவே முடியாது. உரிய வகையில் விசாரணைகள் நடத்தப்பட்டு, சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும். இதனால் பீதியடைந்துள்ள சிலரே, தற்போது கூச்சலிடுகின்றனர்.”

– இவ்வாறு தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியவை வருமாறு:-

“தேசிய மக்கள் சக்தியினர் தொடர்பில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்னதான் கூறினாலும், மக்கள் எம்மை அங்கீகரித்துள்ளனர். எம்மைப் பற்றி மக்களுக்கு எதுவித பிரச்சினையும் கிடையாது. நாட்டு மக்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை நிச்சயம் நிறைவேற்றுவோம்.

தற்போது இடைக்கால அரசே செயற்படுகின்றது. எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பிறகு பலமானதொரு அரசை அமைப்பதற்குரிய ஆணையை நாட்டு மக்கள் வழங்குவார்கள். நாடாளுமன்றத்துக்குத் தகுதியான எதிர்க்கட்சியொன்றையும் அனுப்புமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.

கள்வர்களைப் பிடிப்பது பற்றி கேட்கின்றனர், மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணை ஆரம்பமாகியுள்ளது. ஊடகவியலாளர் லசந்த, விளையாட்டு வீரர் தாஜுதீன் உள்ளிட்டோர் தொடர்பான கொலை விசாரணைகள் இடம்பெறுகின்றன. உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.

இதனால் சிலர் குழப்பம் அடைந்துள்ளனர். நாம் அரசியல் பழிவாங்கல்களில் ஈடுபடமாட்டோம். நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அனைத்து நடவடிக்கைகளும் இடம்பெறும். எனவே, நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டோர் குழப்பமடைந்து, கள்வர்களைப் பிடிக்குமாறு முன்கூட்டியே கூக்குரல் எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.” – என்றார்.