மக்கள் நலத்திட்டங்களை கையளித்த மு.க.ஸ்டாலின்: பூசகர்களின் பிள்ளைகளுக்கும் உதவி
.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீர்வளத் துறை சார்பாக 8 மாவட்டங்களில் சுமார் 83 கோடியே 19 இலட்ச ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட தடுப்பணைகள், புதிய குளம், புதிய அலுவலகக் கட்டிடம், புனரமைக்கப்பட்ட வாய்க்கால்கள் போன்ற 19 நிறைவேற்றப்பட்ட திட்டப் பணிகளை வைத்து திறந்து வைத்தார்.
தமிழக தலைமைச் செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்தத் திட்டங்களை அவர் திறந்துவைத்தார்.
இந்து சமய அற நிலையத்துறை மூலம் செயல்படும் ஒரு கால பூசைத் திட்ட கோவில்களில் பணியாற்றும் பூசகர்களின் பிள்ளைகளின் உயர் கல்வியின் உதவித் தொகையாக ஐநூறு மாணவர்களுக்கு மொத்தம் ஐம்பது இலட்சம் ரூபாய் வழங்கும் முகமாக பத்து மாணவர்களுக்கு தலா 10,000 ரூபாவிற்கான வங்கி காலோசளைகளையும் வழங்கிவைத்தார்.
இந்த உதவித் திட்டத்தின் மூலம் அரச மற்றும் தனியார் கல்வி நிலையங்களில் கலை, அறிவியல், பொறியியல், சட்டம், மருத்துவம் பயிலும் பூசகர்களின் பிள்ளைகள் பயனடைவர்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
கடந்த வருடத்தில் இத் திட்டத்தின் ஊடாக 400 மாணவர்கள் பயன் பெற்றதாகவும் அவர் கூறினார்.