Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மன்னார் மறை மாவட்டத்தின் 4வது ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்

.

மன்னார் மறை மாவட்டத்தின் 4 வது ஆயராக தெரிவு செய்யப்பட்ட பேரருட் திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் இன்றைய தினம் சனிக்கிழமை (22)  ஆயராக அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளார்.

 மன்னார் மறை மாவட்டத்தைச் சேர்ந்த பேரருட்திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் மறை மாவட்டத்தின் புதிய ஆயராக தெரிவு செய்யப்பட்ட நிலையில் இன்றைய தினம் சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மடு திருத்தலத்தில் வைத்து ஆயராக அருட்பொழிவு  செய்யும் நிகழ்வு   நிகழ்வு இடம்பெற்றது. மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயர்  இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அபிஷேக நிகழ்வு மற்றும் திருப்பலி இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கைக்கான  பிரதிநிதி   பிறைன் உடைக்வே ஆண்டகை, கொழும்பு உயர் மறைமாவட்ட பேராயர் மல்கம் காடினல் ரஞ்சித் ஆண்டகை, மற்றும் இலங்கையின் அனைத்து மறைமாவட்ட ஆயர்களும் கலந்து கொண்டனர். 
-மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது ஆயராக  பேரருட் திரு  அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம்   கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14ஆம் திகதி நியமிக்கப்பட்டார். பரிசுத்த பாப்பரசரினால் புதிய ஆயருக்கான நியமனம் வழங்கப்பட்டது.அதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை மன்னார் மறை மாவட்டத்தின் தற்போதைய ஆயராக உள்ள   இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை விடுத்திருந்தார்.
இந்த நிலையிலே இன்றைய தினம் சனிக்கிழமை(22) காலை 9.30 மணியளவில் மன்னார் மறைமாவட்டத்தின் 4 வது புதிய ஆயராக அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அடிகளார் அருட்பொழிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.