Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பாரிஸ் லாகுர்னே சிவன் கோயிலை முற்றுகையிட்ட பொலிஸார்! : வருமான வரிச் சோதனை!!

.

பாரிஸ் லாகுர்னே சிவன் கோயிலை முற்றுகையிட்ட பொலிஸார்!
நேற்றுக் காலை 10 மணியளவில் 20 பேர் அடங்கிய பொலிஸ்ஸார் உட்பட்ட வருமான வரிச் சோதனை செய்யும் அதிகாரிகள் குழுவால் பாரிஸ் லாகுர்னே சிவன் கோயில் முற்றுகையிடப்பட்டது. பல மணிநேரங்கள் நீடித்த இந்தச் சோதனை முடிவில் அர்ச்சனை சீட்டுக்க்கள் விற்பனைக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டிருந்த கணக்காளர் மற்றும் விற்பனையாளர் திரு என்றழைக்கப்படும் நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார். மேற்படி ஆலயத்தில் திரட்டப்படும் நிதி யாழில் லக்ஸ்ஹொட்டல் நடத்தவும் அங்கு நடைபெறுகின்ற காமக் களியாட்டங்களுக்கும் சஜித் பிரேமதாஸாவின் கட்சி நடவடிக்கைகளுக்கும் பயன்படுத்தப்பட்டு வருவதை தேசம்நெற் பல தடவை சுட்டிக்காட்டி வந்தது. குறிப்பாக புலம்பெயர் தேசங்களில் வயோதிப ஆண்களால் நடத்தப்படுகின்ற ஆலயங்கள் பெரும்பாலும் ஆன்மீக நோக்கங்களுக்காக அல்லாமல் அவர்களுடைய வேறு தேவைகளுக்கே பயன்பட்டு வருகின்றது என்பதற்கு லாகுர்னே சிவன் கோவிலும் குடும்பி ஜெயந்திரனும் நல்ல உதாரணம். புலம்பெயர் மக்கள் ஆலயங்களில் செலவிடும் பணம் பெரும்பாலும் சட்டவிரோதமாக அல்லது அநியாயமாகவே அழிந்து போவதாக உள்ளது.
மேலும் வெற்றிவேலு ஜெயேந்திரனின் பினாமியும் தற்போதைய ஆலயத் தலைவருமான இரத்தினம் பாதுகாப்பு பெட்டகத்தின் சாவியுடன் வரும்படி விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். அத்துடன் குடும்பியின் நீண்ட கால பினாமியான கருணா என்றழைக்கப்படும் சிவகுருநாதன் கருணாகரனும் நாளைய தினம் பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இக்கோயிலில் இடம்பெற்று வரும் மோசடிகள் தொடர்பில் பல்வேறு மட்டங்களிலிமிருந்து இருந்து வந்த முறைப்பாடுகளை அடுத்தே பிரான்ஸ் அரசாங்கத்தின் வருமான வரி அதிகாரிகளின் கிடுக்குப்பிடி விசாரணை வளையத்திற்குள் பாரிஸ் சிவன் கோயில் வந்துள்ளது. சமீபத்தில் புரட்டாதி சனி விரதகாலத்தில் மட்டும் பக்தர்கள் சிவன் கோயிலில் எரித்த எள்எண்ணைய் பொதி மூலம் வாரத்திற்கு 25000 தொடக்கம் 30000 யூரோக்கள் வரை வசூலானதாக தகவல்கள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணத்தில் பதின்மவயது பெண் பிள்ளைகளை சீரழித்துவரும் வெற்றிவேலு ஜெயேந்திரனுக்கு பாரிஸ் சிவன் கோயிலிருந்து வரும் யூரோக்களும் உமாசந்திரப் பிரகாஷ்ஷின் அரசியல் செல்வாக்குமே குடும்பியை சட்டத்தின் முன் தண்டனையிலிருந்து தப்ப வைக்கின்றன.
முகநூல் பதிவு...