Breaking News
இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடல்!
.
“இந்தியா - இலங்கை நட்புறவு பற்றிய உயர்மட்ட வட்டமேசை” கலந்துரையாடல் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தால் நேற்று வியாழக்கிழமை (10) ITC ரத்னதீபவில் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவின் வரவேற்பு உரையுடன் இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது.
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் இருதரப்பு உறவின் முக்கிய அம்சங்களைப் பற்றி விவாதிப்பதற்கும் இரு நாடுகளுக்கு இடையே மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான வழிகளை முன்மொழிவதற்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் சந்தோஷ் ஜா, சிறந்த பொருளாதார வல்லுனரும் வர்த்தக நிபுணருமான கணேஷ் விக்னராஜா,உள்ளூர் சிந்தனைக் குழுக்கள் மற்றும் கருத்துத் தலைவர்களின் பிரதிநிதிகள் மற்றும் உயர் ஸ்தானிகராலயத்தின் தொடர்புடைய பிரிவுகளை வழிநடத்தும் அதிகாரிகள் போன்றோர் கலந்து கொண்டனர்.