Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

அமெரிக்காவின் மாநிலமாக மாறவேண்டிய அவசியம் கிடையாது! ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் , பிரபல நடிகர் மைக் மெயர்ஸ்.

.

அமெரிக்காவின் மாநிலமாக கனடா ஒருபோதும் மாறப்போவதில்லை என ஒன்றாயோ மாகாண முதல்வர் டக் போர்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் 51-வது மாநிலமாக கனடா மாற வேண்டும் என்று அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் தெரிவித்திருந்தார்.

சமூக ஊடகம் வாயிலாக அவர் இந்த கருத்தினை வெளியிட்டு இருந்தார். எவ்வாறு எனினும் இந்த கருத்து தொடர்பில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பெருமைமிகு கனடியர்கள் எப்பொழுதும் கனடியவர்களாகவே இருக்க விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா தனது கெடுபிடிகளை அதிகரித்தால் ஒன்றாரியோவில் இருந்து கனடிய மாநிலங்களுக்கு விநியோகம் செய்யும் மின்சாரம் துண்டிக்கப்படும் என அவரை எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நியூயோர்க், மிச்சிகன் மற்றும் மினசோட்டா போன்ற மாநிலங்களுக்கு ஒன்றாரியோவில் இருந்து மின்சாரம் விநியோகம் செய்யப்படுகின்றது.

இவ்வாறான ஒரு பின்னணியில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இறுதி கட்டமாக இவ்வாறு மின்சாரத்தை துண்டிக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என டக் போர்ட் தெரிவித்துள்ளார்.இதேவேளை, கனடியர்களுக்கு தங்களை பார்த்துக் கொள்ள தெரியும் எனவும் எந்த ஒரு நாட்டினதும் மாநிலமாக மாறவேண்டிய அவசியம் கிடையாது எனவும் பிரபல நடிகர் மைக் மெயர்ஸ் தெரிவித்துள்ளார்.