Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

சர்வதேச நீதிமன்றத்திற்கு அமெரிக்காவில் தடை விதித்தார் டொனால்ட் டிரம்ப்,

,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (ஐசிசி) மீது தடைகளை விதிக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். 

முன்னதாக, காசாவில் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்ததைக் காரணம் காட்டி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளார். 

சட்டவிரோதமான மற்றும் ஆதாரமற்ற செயல்கள் மூலம் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவை ஐசிசி குறிவைத்ததாக இந்த உத்தரவு குற்றம் சாட்டுகிறது. 

அமெரிக்கா அல்லது இஸ்ரேல் ஆகிய இரண்டும் ஐசிசியில் உறுப்பினராக இல்லை, இரு அரசாங்கங்களும் வரலாற்று ரீதியாக அதன் அதிகாரத்தை எதிர்த்தன. 

டிரம்பின் உத்தரவு ஐசிசி அதிகாரிகள் மீது உறுதியான மற்றும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தடையினால் ஏற்படும் விளைவுகள் : இந்த தடை உத்தரவால் சொத்துகளைத் தடுப்பது, சொத்துக்களை முடக்குவது மற்றும் அமெரிக்காவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது போன்ற விளைவுகளை சர்வதேச நீதிமன்ற உறுப்பினர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எனினும், இந்த நடவடிக்கையானது மனித உரிமை அமைப்புகளிடமிருந்து விமர்சனத்தை ஈர்த்துள்ளது, அமெரிக்கன் சிவில் லிபர்டீஸ் யூனியன் (ACLU) இதை பொறுப்புணர்வு மற்றும் பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல் என்று வர்ணித்தது. டிரம்ப் முன்பு 2020 இல் ஐசிசியின் முன்னாள் தலைமை வழக்கறிஞரை தடை செய்தார். எனினும், பின்னர் இந்த நடவடிக்கை ஜனாதிபதி ஜோ பைடனால் மாற்றப்பட்டது. சர்வதேச நீதிமன்றத்தின் நிறுவனர் நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், அதனுடன் அமெரிக்கா பல விஷயங்கள் முரண்பட்டு வந்துள்ளது. மேலும், ஜார்ஜ் டபிள்யூ. புஷ் காலத்தில் அமைப்பிலிருந்தே வெளியேறியது குறிப்பிடத்தக்கது.