Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஜிமெயில் முகவரியை இனி மாற்றிக்கொள்ளலாம் | கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை…!

ஜிமெயில் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த, தங்களது பழைய மின்னஞ்சல் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜிமெயில் முகவரியை இனி மாற்றிக்கொள்ளலாம் |  கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை…!
ஜிமெயில் பயனர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த, தங்களது பழைய மின்னஞ்சல் முகவரியை (Gmail Address) மாற்றிக்கொள்ளும் புதிய வசதியை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

ஏன் இந்த மாற்றம்?
இது குறித்து கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் (X) தளத்தில், "2004 ஆம் ஆண்டு ஒரு சிறந்த ஆண்டாக இருந்திருக்கலாம், ஆனால் உங்கள் ஜிமெயில் முகவரி அதே காலப்பகுதியில் சிக்கிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். பழைய, சங்கடமான பெயர்களில் உள்ள மின்னஞ்சல் முகவரிகளுக்கு இதன் மூலம் விடைபெற முடியும்.

எவ்வாறு மாற்றுவது?
பயனர்கள் தங்களது ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) பகுதிக்குச் சென்று, கிடைக்கக்கூடிய புதிய முகவரியைத் தெரிவு செய்துகொள்ளலாம். புதிய முகவரிக்கு மாறினாலும், உங்கள் பழைய முகவரி கணக்குடன் இணைக்கப்பட்டே இருக்கும். எனவே பழைய முகவரிக்கு வரும் மின்னஞ்சல்களும் அதே 'இன்பாக்ஸ்' (Inbox) பகுதிக்கு வந்து சேரும்.  உங்கள் பழைய முகவரியை வேறு யாரும் உரிமை கோர முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஏஐ இன்பாக்ஸ் (AI Inbox)
அத்துடன், ஜிமெயிலில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் புகுத்தும் 'AI Inbox' வசதியையும் கூகுள் அறிமுகம் செய்துள்ளது.  Gemini AI மூலம் உங்கள் மின்னஞ்சல்களைத் தரம் பிரித்து, முக்கியமான வேலைகள் (Suggested to-dos) மற்றும் கட்டணம் செலுத்த வேண்டிய விபரங்களை முன்னிலைப்படுத்தும். 'Topics to catch up on' என்ற பகுதியின் ஊடாக உங்கள் பயணப் பதிவுகள், உணவக முன்பதிவுகள் போன்றவற்றை ஒரே இடத்தில் சுருக்கமாகப் பார்த்துக்கொள்ள முடியும். 
தற்போது இந்த வசதிகள் அமெரிக்காவில் உள்ள குறிப்பிட்ட சில பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் உலகளாவிய ரீதியில் விரிவுபடுத்தப்படவுள்ளது.