Breaking News
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு!
.
ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் வன்னி தேர்தல் தொகுதிக்கான வேட்பாளர்களில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் துளசி ஆகியோர் போட்டியிட உள்ளதாக தெரிய வருகிறது.
இதேவேளை முன்னாள் மாகாண சபை உறுப்பினர் க. சிவனேசன், கரைத்துரைபற்று பிரதேச சபை முன்னாள் தவிசாளர் க. விஜிந்தன், முருகன் பகுதி வர்த்தகரான அ. ரோஜர், முன்னாள் போராளியான கருணாநிதி ஜசோதினி ஆகியோரும் போட்டியிடவுள்ளதுடன் புளொட் மற்றும் டெலோ சார்பில் தலா ஒருவர் நியமிக்கப்படவுள்ளனர்.