Breaking News
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சவாலான ஒரு தேர்தலாக அமையும்!
தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சவாலான ஒரு தேர்தலாக அமையும்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு சவாலான ஒரு தேர்தலாக அமையும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட வேட்பாளர் சந்திரகாசன் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
இம்முறை தேர்தலில் பல தமிழ்த் தேசிய கட்சிகள் பிரிந்து போட்டியிடுவதால் வாக்குகள் பிளவுபடும் என நான் நினைக்கின்றேன். எனினும், இலங்கை தமிழரசுக் கட்சி தேர்தலில் கணிசமான ஆசனங்களை பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.