Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

விவசாயிகளுக்கு விளக்கமறியல் - அடிப்படை மனித உரிமைகளை மீறிய செயல் - உச்சநீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!

,

போராட்டத்தில் விவசாயிகளைக் கைதுசெய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளது மனித உரிமைகளை மீறிய செயல் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
கடந்த 2018 ஆம் ஆண்டு பொலன்னறுவை - மஹியங்கனை சாலையில் உள்ள கலுகேலேயில் நடந்த போராட்டம் தொடர்பாக இரண்டு விவசாயிகள் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். 
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கத் தவறியதை எதிர்த்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி, அரலகங்வில  பொலிஸாரின் அப்போதைய பொறுப்பதிகாரி எஸ்.எம்.எல்.ஆர். பண்டாரா, மனுதாரர்களுக்கு தனது சொந்த நிதியில் இருந்து தலா 30,000 ரூபா  இழப்பீடு வழங்க உத்தர விட்டார்.
உச்ச நீதிபதி தலைமை நீதிபதி ஜெயந்த ஜெயசூர்யா மற்றும் நீதிபதி எஸ். துரைராஜா ஆகியோரின் ஒப்புதலுடன் நீதிபதி யசந்த கோடகோடா இந்த தீர்ப்பை வழங்கினார்.

காவல்துறையின் வேண்டுகோளின் பேரில் நீதிபதிகள் தனிநபர்களை விளக்கமறியலில் வைக்க கூடாது என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. இது போன்ற வழக்குகளில் நீதித்துறை விருப்புரிமையின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியது. 
மேலும் இது போன்ற காவல்துறை கோரிக்கைகளுக்குப் பின்னால் உள்ள அவசியம் குறித்து நீதிபதிகளுக்கு தெளிவாகத் தெரிவிக்கப்பட வேண்டும் என்றும்  தெரிவித்தார்.