Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

நமசிவாயா' - பக்தி பாடல் வெளியிட்ட இளையராஜா பேரன் 'யத்தீஸ்வர் ராஜா'!

இந்த பாடலை உருவாக்குவதற்கு எனது தந்தை கார்த்திக் ராஜா உறுதுணையாக இருந்து பல அறிவுரைகளை வழங்கினார்.

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஸ்வர் ராஜா எழுதி இசை அமைத்து பாடியுள்ள 'நமசிவாயா' என்ற பக்தி பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணர் ஆசிரமத்தில் இன்று வெளியிட்டார். 

பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா. இவரும், இசையமைப்பாளராக உள்ளார். இவரது மூத்த மகன் யத்தீஸ்வர் ராஜா. இவர் இசை துறையில் கவனம் செலுத்தி வருகிறார். திருவண்ணாமலையில் அருள்பாலிக்கும் அண்ணாமலையாரை போற்றும் விதமாக 'நமசிவாயா' என்ற பாடலை எழுதி இசையமைத்துள்ளார். 

இந்த பாடலை திருவண்ணாமலை கிரிவல பாதையில் அமைந்துள்ள ஸ்ரீ ரமணாஸ்ரமத்தில் யத்தீஸ்வர் ராஜா இன்று (ஜூன் 8) பாடி வெளியிட்டு உள்ளார். இந்நிகழ்ச்சியில் கார்த்திக் ராஜா, அவரது மனைவி ராஜ்வி, இளைய மகன் ஜெய்தீஸ்வர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர்.

இதுகுறித்து யத்தீஸ்வர் ராஜா கூறும்போது, ''தற்போது விஸ்காம் படிப்பை முடித்துள்ளேன். இசை துறையில் மேற்படிப்புக்காக லண்டன் செல்ல உள்ளேன். முன்னதாக நானே இயற்றி நானே இசையமைத்து 'ஆட்டோ டியூன்' என்று சொல்லக்கூடிய இசையமைப்பில் 'நமசிவாயா' என்ற சிவன் பாடலை இன்று வெளியிட்டுள்ளேன்.

இந்த பாடலை உருவாக்குவதற்கு எனது தந்தை கார்த்திக் ராஜா உறுதுணையாக இருந்து பல அறிவுரைகளை வழங்கினார். அடுத்து டியூஷன் என சொல்லக்கூடிய பல்வேறு இசை கலவைகள் கொண்டு இசையமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளேன்.

குறிப்பாக மேற்கத்திய பாணி இசையில் அதிக நாட்டம் உள்ளது. இதையடுத்து ஆல்பம் மற்றும் திரை இசையில் வாய்ப்புகள் என்று அடுத்தடுத்த பணிகளில் ஈடுபட உள்ளேன்." என்று யத்தீஸ்வர் ராஜா தெரிவித்தார்.