Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஏமன் எண்ணெய் துறைமுகம் மீது அமெரிக்கா தாக்குதல்; வளைகுடாவில் பதற்றம்!

ஈரான் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா ஆரம்பித்த தாக்குதல்களில் மிகவும் கொடிய தாக்குதல் இதுவாகும்.

ஏமனின் பாரிய செல்வமாக விளங்கும் ராஸ் இஸ்ஸா எண்ணெய் துறைமுகத்தை வியாழக்கிழமை (17) அமெரிக்கா தாக்கியழித்துள்ளது.

இதில் 38 பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 102 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிகின்ற நிலையில், ஏமன் மீதான தாக்குதல் மத்திய கிழக்கில்  பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

மிகவும் கொடிய தாக்குதல் 

ஈரான் ஆதரவாளர்கள் மீது அமெரிக்கா ஆரம்பித்த தாக்குதல்களில் மிகவும் கொடிய தாக்குதல் இதுவாகும்.

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் செங்கடல் கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்களை நிறுத்தாவிட்டால் ஜனவரி மாதம் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து கடந்த மாதம் மத்திய கிழக்கில் மிகப்பெரிய இராணுவ நடவடிக்கையாக ஆரம்பிக்கப்பட்ட பாரியளவிலான தாக்குதல்களை நிறுத்த மாட்டோம் என அமெரிக்கா சபதம் செய்துள்ளது.இந்த தாக்குதல் ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எரிபொருளை துண்டிப்பதற்காக தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க இராணுவம் குறிபிட்டுள்ளது.