பலதும் பத்தும். 16.04 .2026 - கிளிநொச்சியில் அடி காயங்களுடன் முதியவர் சடலம் மீட்பு!
பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை !
திருகோணமலையில் மகாவலிஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழப்பு!
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள சோமாவதி பாலத்திற்கு கீழ் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று சகோதரர்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருவரின் சடலம் இன்று புதன்கிழமை (15) காலை மீட்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு நீரில் மூழ்கி காணாமல் போன மூன்று சகோதர்களும் சோமாவதி வீதி, சேருநுவர-ஜெமுனுபுர பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதர்களாவர்.இவர்களில் லக்சான் பேரரேரா (வயது 35) என்பவர் மாத்திரமே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஒன்பது மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்! 13 மாணவர்கள் காயம் அடைந்துள்ளளனர்!!
தெற்கு - மத்திய துருக்கியில் உள்ள பாடசாலையில் மாணவன் ஒருவன் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒன்பது மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். எட்டாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவனே இந்த சம்பவத்தை மேற்கொண்டுள்ளான். 13 மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஓய்வு பெற்ற பொலிஸ் ஸ் அதிகாரியின் மகன் தந்தையின் துப்பாக்கியை எடுத்து வந்து இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது
ஈகுவாட்டரில் வெள்ளம், நிலச்சரிவுகளால் 15 பேர் உயிரிழந்துள்ளனர்!
தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்க நாடான ஈகுவாட்டரில் தொடர்ச்சியான கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் 15 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 110,875 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஈக்வடாரின் தேசிய இடர் மேலாண்மைச் செயலகம் தெரிவித்துள்ளது. பல மாகாணங்களில் பரவலாக வீடுகள் மற்றும் உள்கட்டமைப்புகளில் சேதம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் மருத்துவமனையில் அனுமதி!
பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) திடீர் சுகயீனம் காரணமாக சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முக்கிய தகவல்கள்: நேற்று (15) மாலை அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறைச்சாலை மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்தத் தகவலை சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளார்.
முருகண்டியில் விபத்து: புகையிரதம் மோதிய காரில் இருந்த தம்பதியினர் காயம்.
முருகண்டி பகுதியில் இன்று(16) மதியம் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது. புகையிரதப் பாதையை கடக்க முற்பட்ட கார் ஒன்று, அதே நேரத்தில் வந்துகொண்டிருந்த புகையிரதத்துடன் மோதியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்தில் காரில் பயணித்திருந்த கணவன் மற்றும் மனைவி இருவரும் காயமடைந்துள்ளனர். விபத்துக்குப் பிறகு உடனடியாக அப்பகுதி மக்கள் மற்றும் அவசர உதவி குழுவினர் இணைந்து அவர்களை மீட்டு, கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவர்களின் நிலைமை குறித்து மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி பொலிஸார் சார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். புகையிரதப் பாதைகளை கடக்கும் போது அதிக கவனம் தேவை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த விபத்து நினைவூட்டுகிறது.
சூடானில் கிட்டத்தட்ட 700 பொதுமக்கள் உயிரிழந்துள்ள
சூடானில் ஜனவரி மாதம் முதல் இம்மாதம் வரை நடந்த ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கிட்டத்தட்ட 700 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. இது, தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உள்நாட்டுப் போரின் அதிகரித்து வரும் உயிரிழப்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவதாக ஐ. நா. தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானில் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை !
வரும் நாட்களில் பாகிஸ்தானில் ஈரானுடன் இரண்டாவது சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என சூசகமாகத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், போர் "முடிவுக்கு வரும் தருவாயில் உள்ளது" என ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்குத் தெரிவித்தார் . ஹோர்முஸ் ஜலசந்தியில் தனது முற்றுகை இரண்டாவது நாளாகத் தொடர்வதால், "ஈரானுக்கு உள்ளேயும் வெளியேயும் கடல் வழியாக நடைபெறும் பொருளாதார வர்த்தகத்தை முற்றிலுமாக நிறுத்திவிட்டதாக" அமெரிக்க இராணுவம் தெரிவித்துள்ளது .
கிளிநொச்சியில் அடி காயங்களுடன் முதியவர் சடலம் மீட்பு!
கிளிநொச்சி முகமாலை பொந்தர் குடியிருப்பு பகுதியில் அடி காயங்களுடன் முதியவர் ஒருவரின் சடலம் இனங்கானப்பட்டுள்ளது. கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட. முகமாலை வடக்கு பொந்தர் குடியிருப்பு பகுதியில் இன்று (15-04-2026) ஆடு மேய்க்க சென்ற ஒருவர் ஆட்கள் நடமாட்டமற்ற காணியொன்றுக்குள் சடலம் கிடப்பதை அவதானித்த நிலையில் அப்பகுதி கிராம அலுவலர் மற்றும் பளைப் பொலிசாருக்கு தகவல் வழங்கப் பட்டதையடுத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு சடலமாக கானப்பட்டவர் முகமாலை வடக்கு பகுதியை சேர்ந்த இளையவன் நல்லதம்பி (வயது -71) என அடையாளம் காணப்பட்டுள்ளது.


