Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். காற்று மாசுபாடு குறித்து நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு!

யாழ்ப்பாணத்தில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளையும் எடுக்குமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று (19) யாழ்ப்பாண மாநகர சபைக்கு உத்தரவிட்டது. 

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வைத்தியர் உமா சுகி நடராஜா தாக்கல் செய்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி ரொஹாந்த அபேசூரிய மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வே இந்த உத்தரவைப் பிறப்பித்தது.

மனு விசாரணைக்கு வந்தபோது, பிரதிவாதிகள் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகளிடம், மேல்முறையீட்டு நீதிமன்றத் தலைமை நீதிபதி, யாழ்ப்பாணப் பகுதியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க சுற்றுச்சூழல் சட்டங்களின் விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்று விசாரித்தார்.

அதன்படி, யாழ்ப்பாணத்தில் சுற்றுச்சூழல் மாசுபாட்டைத் தடுக்க, கட்டளைச் சட்டத்தின் விதிகளின்படி நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதிகள் அமர்வு, யாழ்ப்பாண மாநகர சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை இதற்குத் தேவையான ஆதரவை வழங்க வேண்டும் என்றும் தலைமை நீதிபதி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணப் பகுதியில் சுற்றுச்சூழலில் வெளியிடப்படும் குப்பைகள் மற்றும் இரசாயனக் கழிவுகளால் காற்று மாசுபாடு ஏற்படுவதாகக் கூறி, இந்தச் சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி, சம்பந்தப்பட்ட வைத்தியர் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.