யாழ்ப்பாணம் கொழும்பு இடையேயான இரவுநேர தபால் சேவை புகையிர இயந்திரம் செயலிழந்த நிலை!
வடக்கு ரயில் புகையிரத சேவைகள் கடந்த காலங்களில் குறைக்க பட்டிருந்த நிலையில் சேவைகள் அதிகரிக்கபட்டு வினைத்திறனாக்கபடும் என அரசாங்கம் தெரிவித்து.
யாழ்ப்பாணம் கொழும்பு இடையேயான இரவுநேர தபால் சேவை புகையிர இயந்திரம் செயலிழந்த நிலையில் பெருமளவான பயணிகள் நேற்று இரவு சுமார் மூன்று மணத்தியாலத்திற்கு மேலாக காத்திருக்க வேண்டிய சூழல்ஏற்பட்டது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது யாழ் கொழும்புக்கு இடையேயான இரவு நேர தினசரி தபால் சேவை புகையிரத சேவையானது நேற்று 10 ஆம் திகதி இரவு யாழ் காங்கேசன்துறையில் இருந்து 8 மணிக்கு புறப்பட்டு 8:30 மணயளவில் யாழ் புகையிரத நிலையத்தை அடைந்து பின்னர் கொழும்பு நோக்கி சேவையை ஆரம்பித்திருந்தது .
இந்நிலையில் பரந்தன் கிளிநொச்சிக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரத இயந்திரம் செயலிழந்தது இதன் காரணமாக சுமார் மூன்று மணித்தியாலங்கள் வரை பயணிகள் காத்திருந்த நிலையில் பலர் புகையிரதத்தை விடுத்து பேரூந்துகளில் கொழும்பு நோக்கி பயணமாகினர் .
மேலும் ஏனைய நிலையங்களில் காத்திருந்த பயணிகளும் மாற்று வழிகளை மேற்கொண்டனர் .
இதனை தொடர்ந்து அதிகாலை 12:30 மணயளவில் காங்கேசன்துறையில் இருந்து வருகை தந்த மற்றுமொரு புகையிரத இன்ஜின் மூலம் குறித்த புகையிரத சேவை கிளிநொச்சி வரை தள்ளி செல்லப்பட்டு பின்னர் இயந்திரம் மாற்றப்பட்டு கொழும்பு நோக்கி பயணம் ஆரம்பமானது .
வடக்கு ரயில் மார்க்கத்திற்கான புகையிரத சேவைகள் கடந்த காலங்களில் குறைக்க பட்டிருந்த நிலையில் சேவைகள் அதிகரிக்கபட்டு வினைத்திறனாக்கபடும் என அரசாங்கம் தெரிவித்து வருகின்ற பொழுதிலும் இவ்வாறான அசௌகரியங்கள் தொடர்ந்து பதிவாகின்றமை குறிப்பிடத்தக்கது.


