Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அழைப்பை ஏற்று, வடமாகாண மீனவ சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடல்!

அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் அழைப்பு ஏற்று, வடமாகாண   மீனவ சங்கங்கள் யாழ்ப்பாணத்தில் கலந்துரையாடலில் ஈடுபட்டது.
 குறிப்பாக அண்மையில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் தமிழகம் சென்றிருந்த நிலையில் இந்திய மீனவர் விடயங்கள் பேசும் பொருளாக காணப்பட்டது.

ஆனால் தமிழகம் செல்வதற்கு முன்னர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் இலங்கை மீனவர் பிரதிநிதிகளை சந்தித்து எதுவிதமான கலந்துரையாடலும் இல்லாமல் தான்தோன்றித்தனமாக தமிழகம் சென்று அங்கு இலங்கை மீனவர் பிரச்சினை தொடர்பில் பேசி இருக்கின்றார்.
இது தொடர்பில் நாங்கள் ஊடகங்கள் வாயிலாக விமர்சனங்களை வெளியிட்டோம்.,

அத்துடன் இந்தியா சென்று வந்த தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அங்கு என்ன பேசினார்கள் என்ற விடயம் கூடி இதுவரை பேசப்படாத நிலையில் இன்றைய தினம் எங்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
அண்மையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் குழு தமிழகம் சென்று  தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து பேசி இருந்த என்னென்ன விடயங்கள் பேசப்பட்டது என்பது தொடர்பில் அவர் சொல்லவில்லை அப் பொழுது.

குறிப்பாக வட மாகாணத்தில் உள்ள நான்கு மாவட்டங்களில் இருந்தும் ஒவ்வொரு மீனவ அமைப்புகள் இன்றைய தினம் வருகை தந்து தமது கருத்துக்களை பதிவு செய்திருந்தனர்.
இவ்வாறு தெரிவித்தார் வட மாகாண மீனவ சங்கங்களின் இணையத்தின் செயலாளர் செயலாளர் முகமட் ஆலம்.

அதேபோல் 2015 ஆம் ஆண்டு பேசப்பட்ட, இந்திய இலங்கை மீனவர் தொடர்பான பேச்சு வார்த்தை, எட்டப்பட்ட விடயங்கள் பேச்சுவார்த்தையில் பேசப்பட்ட விடயங்கள், இங்கே பலரினால் முன்வைக்கப்பட்டது.
தொடர்பாக பேசப்பட்டது இந்திய மீனவர்களால் ஏற்பட்ட இழப்புக்களை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்பது தொடர்பில் இப்பொழுது தற்சமயம் ஒரு கேள்வி ஒன்று எழுந்துள்ளது.

 பாராளுமன்ற உறுப்பினர் கூறி இருந்தார் எதிர்வரும் ஐந்தாம் தேதி பாராளுமன்றத்தில், கவன ஈர்ப்பு மாதிரி ஒன்றை பாராளுமன்றத்தில் செய்து அரசாங்கத்திடமிருந்து அது தொடர்பில் மீனவர்களுக்கு ஏதாவது மானியங்கள் கிடைக்குமா என்பது தொடர்பில்தான் கேட்டுக் கொள்வதாக கூறி இருந்தார்.
அதேபோல் தான் பேசிய விடயங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படுகிறது பாராளுமன்ற உறுப்பினர் தான் போது கருத்து தெரிவித்ததாக முகமட் ஆலம் தெரிவித்தார்.