Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

காஷ்மீர்: குட்டி Cupboard-இல் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள்.

.

“ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அம்மைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து, பாதுகாப்புப் படையினர்நேற்று முன் தினம் அங்கு தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

அங்குள்ள ஒரு கிராமத்தில் உள்ள வீட்டில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்ததைக் கண்டறிந்தனர்.

பாதுகாப்புப் படையினரைப் பார்த்ததும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடியாக பாதுகாப்புப் படையினரும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.இதில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதேபோல, மற்றொரு பகுதியில் நடந்த என்கவுண்டரிலும் பாதுகாப்புப் படை வீரர் உயிரிழந்தார்.

இந்த என்கவுண்டரில் பயங்கரவாதிகள் தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வந்த நிலையில் என்கவுண்டரில் மேலும் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த நிலையில் பயங்கரவாதிகள் இருந்த வீட்டில் ராணுவத்தினர் நடத்திய சோதனையில் அவர்கள் வீட்டின் துணி வைக்கும் அலமாரிக்குப் பின்னால் சுவரில் ரகசிய பதுங்கு குழி [BUNKER] அமைத்து அதில் அவர்கள் பதுங்கியிருந்து கண்டுபிடிக்கப்பட்டிள்ளது.

இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. “,