Breaking News
வவுனியாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்: ஒன்றரை மணி நேரமாக தொடர்ச்சி
.

வவுனியாவில் பாடசாலை முன்பாக ஆர்ப்பாட்டம்: ஒன்றரை மணி நேரமாக தொடர்ச்சி
வவுனியா உலுக்குளம் ஸ்ரீசுமன வித்தியாலயத்தில் ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும் இதன் காரணமாக மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் போதிய அளவில் இடம்பெறுவதில்லை எனவும் தெரிவித்து பெற்றோர்கள் பாடசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது ஆசிரியர்களை நியமிக்க கோரியும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாத வகையில் செயல்படக் கோரியும் பதாதைகளை தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பல பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.