Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கடலுக்குச் சென்ற 6 மீனவர்கள் மாயம்; தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிரம்!

.

தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற திரேஸ்புரம் பகுதியைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.தூத்துக்குடியில் இருந்து மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற ஆறு மீனவர்கள் மாயமாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் கண்டுபிடித்து தரும்படி தமிழக அரசுக்கு திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தூத்துக்குடி, திரேஸ்புரம் பகுதியில் இருந்து கடந்த நவ.21 ஆம் தேதி, சதீஷ்குமார் என்பவருடைய படகில் அதே பகுதியை சேர்ந்த விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகியோர் மீன்பிடி தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளனர். இவர்கள் ராமேஸ்வரம் பாம்பன் கடல் பகுதியிலிருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்துள்ளனர்.

இந்நிலையில்,வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுபகுதி உருவாகி, தாழ்வு மண்டலமாக மாறி நேற்று (நவ.29) புயலாக உருவாகியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆனால், காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதற்கு முன்பாகவே இவர்கள் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற நிலையில், கடந்த 26 ஆம் தேதி கரை திரும்ப வேண்டிய இவர்கள் தற்போது வரை கரை திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

கடலில் மாயமான மூன்று மீனவர்கள்

கடலில் மாயமான மூன்று மீனவர்கள் 

 

கடலில் மாயமானவர்களில் இருவர்

கடலில் மாயமானவர்களில் இருவர்

 இதனால், அச்சமடைந்த திரேஸ்புரம் வடபாகம் நாட்டுப்படகு மீனவ சங்கத்தினர், இது குறித்து மீன்வளத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் கடலோர காவல்படையினர், ஆழ்கடலில் தேடியுள்ளனர். ஆனால், இதுவரை மீனவர்கள் சென்ற படகையும், மீனவர்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.

நேற்று (நவ.29) மதியம் 2:30 மணியளவில் உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் இன்று (நவ.30) சனிக்கிழமை தமிழக கடலோர பகுதியில் கரையைக் கடக்க இருக்கும் நிலையில், கடலுக்குச் சென்ற 6 மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் திரேஸ்புரம் பகுதி மீனவர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே, தமிழக அரசு உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் காணாமல் போன மீனவர்களையும், மீனவர்கள் சென்ற படகையும் கண்டுபிடித்து தர வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டொடர்ந்து, மாவட்ட நிர்வாகம் கடலோர பாதுகாப்பு குழும காவல்துறை மற்றும் இந்திய கடலோர பாதுகாப்பு படை ஆகியோருக்கு புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில், இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் கப்பல்கள் மூலம், காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், கடந்த 26 ஆம் தேதி வீசிய பலத்த காற்றில் சிக்கி இவர்கள் காணாமல் போனார்களா? என்பது குறித்தும் விசாரணை மேற்கோண்டு வருகின்றனர்.