Breaking News
அசிங்க ஆரசியல்! ஈழத்தமிழரை ஒடுக்கும் சக்தி மிக்க மனிதராக உருவாக்கும் இலங்கை இராணுவம்!
,

ஈழத்தில் அருண் சித்தார்த் யாரென்று எவரும் கேட்டால் பெரும்பாலானவர்கள் அவரை ஆவா குழு, சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு குடைதூக்குபவர், கஞ்சா வழக்கில் சிக்கியவர், இராணுவத்திற்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுவருபவர் என்றே அடையாளப்படுத்துவார்கள்.
ஈழத்தில் அருண் சித்தார்த் என்பவர் சிங்கள பேரினவாதத்தின் நிகழ்ச்சி நிரலில் ஈழத்தமிழரை ஒடுக்கும் நடவடிக்கையிலேயே செயற்பட்டு வருகிறார். உண்மையில் பல்வேறு வழிகளில் "அருண் சித்தார்த் மைத்ரேயன்" எனும் இந்த நபரை சக்தி மிக்க மனிதராக உருவாக்கும் வேளைகளில் இலங்கை இராணுவம் ஈடுபட்டு வருகிறது.
இன்று சில திமுக ஆதரவாளர்கள் இலங்கை இராணுவம் செய்யும் அதே வேளையை செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.
சில திமுக ஆதரவாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் பக்கத்தில் நிற்காமல் ஒடுக்கியவர் பக்கத்தில் நின்று மேலும் ஈழத்தமிழரை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபடும் அருண் சித்தார்த் போன்றவரை அழைத்து சிங்கள பேரினவாதத்திற்கு ஆதரவாக நிற்பது மிகுந்த வேதனை.
யார் இந்த அருண் சித்தார்த்?
1) ஆவா குழு என்பது ராஜபக்சக்கால் உருவக்கப்பட்டு வடக்கில் கொள்ளை, கடத்தல், கட்டப்பஞ்சாய்ந்து போன்ற விடயங்களில் ஈடுபட்டு வரும் ஒரு குழு அதில் முக்கிய பதவியில் இருப்பவர் தான் அருண் சித்தார்த்.
2) 2017 இல் காக்கைதீவு பகுதியில் 79 G கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு 11 மாதங்கள் யாழ்ப்பாண சிறைச்சாலையில் "2017.03.09 Jaffna MC Court 292/17" என்கிற வழக்கு இலக்கத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.
3) அருண் சித்தார்த், அவரது மனைவி, உறவினர் உள்ளிட்ட 5 பேர் ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் வெற்றிவேல் ஜெயந்திரனை தாக்கி, அவரது ஹொட்டேலிற்குள் அத்துமீறி நுழைந்து அட்டூழியம் புரிந்து கைது செய்யப்பட்டவர்கள்.
4) “அம்பேத்கர் இயக்கம்” என அம்பேத்கரை முன்நிறுத்தி அருண் சித்தார்த் சிங்கள பௌத்த பேரினவாதத்தின் உதவியுடன் தமிழர் பிரதேசங்களை பௌத்தமயமாக்கும் செயல்பாடுகளில் ஈடுபடுவது. உ+ம்: தையிட்டியில் நடந்த போராட்டம்.
5) இனப்படுகொலையாளன் ராஜபக்ச குடும்பத்திற்கு வடக்கில் வாக்கு சேகரிக்க வந்து செருப்பால், தடியால் அடிவாங்கி ஓடியவர்.
6) இனப்படுகொலை செய்யப்பட்டவர்களுக்கான முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தூபியை யாழ் பல்கலைக்கழகத்தில் கட்டக்கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்தவர்.
இவ்வாறு இவர் என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிக்காது ஈழத்தமிழரை ஒடுக்கிய சிங்களபௌத்த பேரினவாதத்தின் பக்கமே நின்றுறிக்கிறார் இவருடன் திமுக ஆதரவாளர்கள் கைகோர்த்திருப்பதை எப்பிடி எடுத்துகொள்வது என்று தெரியவில்லை!!