OSCAR 2025 - 97வது ஒஸ்கர் விருது விழா - ஒஸ்கர் விருதுகளை அள்ளிய ’அனோரா’, ‘த ப்ரூட்டலிஸ்ட்’...
உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆளுமைகளால் மிக முக்கியமான விருது விழாவாக பார்க்கப்படுகிறது.

அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் (Academy of Motion Picture Arts and Sciences) ஆண்டுதோறும் நடத்தும் ஆஸ்கர் விருதுகள் உலகம் முழுவதும் உள்ள திரைப்பட ஆளுமைகளால் மிக முக்கியமான விருது விழாவாக பார்க்கப்படுகிறது. அத்தகைய 97வது ஆஸ்கர் விருது விழாவானது இந்திய நேரப்படி இன்று அதிகாலை அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலுள்ள டால்பி தியேட்டர் அரங்கில் கோலகலமாகத் தொடங்கியது. திரைப்படத்துறையின் 23 பிரிவுகளுக்கு ஆஸ்கர் விருதுகள் வழங்கப்படுகின்றன.
2024ஆம் ஆண்டு வெளிவந்த படங்களுக்கான ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் 13 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டு பலரது கவனத்தையும் பெற்றது ஸ்பானிஷ் திரைப்படமான எமிலியா பெரெஸ் (Emilia Perez). இத்திரைப்படம் ஆங்கில மொழி அல்லாத திரைப்படங்களில் அதிகமாக நாமினேட் செய்யப்பட்ட திரைப்படம் என்ற புதிய சாதனை படைத்துள்ளது. இத்திரைப்படத்தில் நடித்த கார்லா சோஃபியா காஸ்கான் தான் Karla Sofía Gascón) ஆஸ்கர் விருது பட்டியலுக்கு தேர்வாகும் முதல் திருநங்கை என்பது கூடுதல் சிறப்பு.
இதையடுத்து த புரூட்டலிஸ்ட் (The Brutalist) என்ற ஆங்கிலத் திரைப்படம் 11 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. விக்கட் (Wicked) என்ற திரைப்படமும் 10 பிரிவுகளில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. கான்கிளேவ் (Conclave) மற்றும் A Complete Unkown ஆகிய திரைப்படங்கள் 9 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த 97வது ஆஸ்கர் விருது விழாவில் வெற்றியாளர்களின் விவரத்தை அகாடமி குழுவினர் அறிவித்துள்ளனர்
சிறந்த துணை நடிகர் - கியரென் குல்க்கின் (Kieran Culkin) (A Real Pain)
சிறந்த துணை நடிகை - ஸோயி சல்டானா (Zoe Saldana) (Emilia Perez)
சிறந்த இயக்குநர் - ஷான் பேக்கர் (Anora)
சிறந்த திரைப்படம் - அனோரா (Anora)
சிறந்த நடிகை - மிக்கி மேடிசன் (Mikey Madison) (Anora)
சிறந்த நடிகர் - ஏட்ரியன் ப்ரோடி (Adrien Brody) (The Brutalist)
சிறந்த அனிமேஷன் திரைப்படம் - ஃப்ளோ (Flow)
சிறந்த தழுவல் திரைக்கதை - கான்கிளேவ் (Conclave)
சிறந்த அசல் திரைக்கதை - அனோரா (Anora)
சிறந்த ஆடை வடிவமைப்பு - விக்கெட் (Wicked)
சிறந்த ஆவணப்படம் - நோ அதர் லேண்ட் (No other Land)
சிறந்த ஒளிப்பதிவு - த ப்ரூட்டலிஸ்ட் (The Brutalist)
சிறந்த படத்தொகுப்பு - அனோரா (Anora)
சிறந்த ஆடை வடிவமைப்பு & சிகை அலங்காரம் - த சப்ஸ்டன்ஸ் (The Substance)
சிறந்த ஆவணக் குறும்படம் - ஒன்லி கேர்ள் இன் தி ஆர்கெஸ்ட்ரா (The Only Girl in the Orchestra)
சிறந்த பாடல் - எல் மால் El Mal (Movie - Emilia Pérez; Music by Clément Ducol and Camille)
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு - விக்கெட் (Wicked)
சிறந்த அனிமேஷன் குறும்படம் - இன் தி ஷேடோ ஆஃப் தி சைப்ரஸ் (In the Shadow of the Cypress)
சிறந்த லைவ் ஆக்ஷன் குறும்படம் - ஐ ஆம் நாட் ஏ ரோபோ (I'm Not a Robot)
சிறந்த ஒலியமைப்பு - டூன் 2 (Dune 2)
சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ் - டூன் 2 (Dune 2)
சிறந்த சர்வதேச திரைப்படம் - ஐ ஆம் ஸ்டில் ஹியர் (I'm Still Here)
சிறந்த பின்னணி இசை - த ப்ரூட்டலிஸ்ட் (The Brutalist)
13 பிரிவுகளில் பரிந்துரைப்பட்ட ’Emilia Perez’ திரைப்படம் சிறந்த துணை நடிகை, சிறந்த பாடல் ஆகிய இரு பிரிவுகளிலும், 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்ட ’The Brutalist’ திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த ஒளிப்பதிவு, சின்றந்த பின்னணி இசை என மூன்று பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. ஆறு பிரிவுகளில் பரிந்துரைக்க்கப்பட்ட அனோரா திரைப்படம் ஐந்து பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. இந்தியா சார்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ’அனுஜா’ குறும்படம் லைவ் ஆக்ஷன் குறும்பட பிரிவில் விருது வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.