Breaking News
பைத்தியம், .ஜோக்கர், கிறுக்கன் என்கிற ஏளனங்களையும் பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டே கடந்து, சாதித்தும் காட்டியிருக்கிறார்.
.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜீத் பிரேமதாசவின் திருகோணமலை பொதுக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்ட டொக்டர் அர்ச்சுனா, இன்று பாராளுமன்றத்தில் அதே சஜீத் பிரமேதாசவின் ஆசனத்தில் அமர்ந்து கடைசி மட்டும் அதே இடத்தில் இருந்தது என்பது டொக்டர் Purposely எடுத்த Revenge மட்டும் தான் அதற்கும் ஒரு கெத்து வேணும். இது மட்டுமல்ல, அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை ஒதுக்கிய/ தனக்கு உதவாத டக்ளஸ், அங்கஜன், சுமந்திரன் போன்றவர்களை தோற்கடித்து அவர்கள் இருந்த பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் டொக்டர் அர்ச்சுனா. பைத்தியம், .ஜோக்கர், கிறுக்கன் என்கிற ஏளனங்களையும் ஹெயார் என்றும் பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டே கடந்து, சாதித்தும் காட்டியிருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இதுவொரு உதாரணம். அவரின் சிறுபிள்ளைதனமான செயற்பாடுகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் டொக்டர் அர்ச்சுனா தெரிந்தே அனைத்தையும் செய்கிறார், தன்னை எப்போதும் பேசு பொருளாகவே வைத்துக்கொள்வதில் முனைப்பாக இருக்கிறார். அவரின் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார்
டொக்டர் அர்ச்சுனா குறைத்து மதிப்பிடப்படக் கூடியவர் அல்ல. அவரின் இந்த அசாத்திய தைரியம், துணிச்சல் வேற லெவல்ஆனால் தமிழ்த்தேசியம் இவரால் உயர்ச்சி பெறுமா என்னும் கேள்விக்கு யாரிடமும் விடை இல்லை. இனத்திற்கான மாந்தர்களின் பயணம் என்பது ஒரே நேர்கோட்டில் நேர்மையுடன் இருக்கவேண்டும். இவரிடம் அது இல்லை. தனிமனித அறம் இல்லை. தலைவரின் பெயரை அடிக்கடி சொல்பவர் அவரின் உயரிய மாண்பை பின்பற்றுவதில்லை. மிக குறைந்தளவு தமிழர்களே பங்குபற்றும் நடாளுமன்றத்தில் இனத்தின் அறத்தை இவர் சிதைப்பார் என்பதே பலர் கணிப்பு. இனவாத ஜே வி பியில் போட்டியிட்டு வென்ற தமிழர்களை தமிழர்கள் எனக்கொள்வதே தவறு..இவ்வளவு காலம் இருந்தவர்கள் என்ன செய்தார்கள்?. ஏன் மக்கள் புறக்கணித்தார்கள்? மக்களின் முடிவே மகேசன் முடிவு.
இனத்தின் குரல்