Breaking News
கிளிநொச்சி சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்து முகாமிட்ட இலங்கை இராணுவம்; கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடர்ந்த போராட்டம்.
பூங்கைவை விட்டு இராணுவத்தினர் வெளியேறுமாறு கோரி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ், கட்சி ஆதரவாளர்களுடன் பொது மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
கிளிநொச்சி சந்திரன் பூங்காவை ஆக்கிரமித்து முகாமிட்ட இலங்கை இராணுவம்; கெடுபிடிகளுக்கு மத்தியில் தொடர்ந்த போராட்டம்.
கிளிநொச்சி – சந்திரன் பூங்காவை இராணுவம் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பாதுகாப்பு படையினரது கெடுபிடிகளுக்கு மத்தியில் இன்று செவ்வாய்கிழமை(21) போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர். கிளிநொச்சி மண்ணின் சொத்தான சந்திரன் பூங்காவை இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர்.
எனவே பூங்கைவை விட்டு இராணுவத்தினர் வெளியேறுமாறு கோரி தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி ஊடக பேச்சாளரும் சட்டத்தரணியுமான சுகாஸ் தலைமையிலான கட்சி ஆதரவாளர்களுடன் பொது மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு, ஆர்ப்பாட்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தனர். எனினும், பொலிஸாரின் கெடுபிடிகளுக்கு மத்தியில் போராட்காரர்கள் சுமார் 2 மணித்தியாலம் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் அங்கிருந்து விலகிச் சென்றுள்ளனர்.