என் முன்னாள் மனைவியையும் ராதிகா அரவணைப்பார்.. அவர்களிடம் ராதிகாவுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. அவ்வளவு அன்பாக பழகுவார்.
.
என் முன்னாள் மனைவியையும் ராதிகா அரவணைப்பார்.. சரத்குமார் எமோஷனல் டாக்.
சென்னை: தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக திகழ்ந்த எம்.ஆர்.ராதாவின் மகள் ராதிகா. இவரும் சினிமாவில் சிறந்த நடிகை என்ற பெயரை பெற்றவர்.
சரத்குமாரை காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர்; இப்போது திரைப்படங்களிலும், நாடகங்களிலும் நடித்துவருகிறார்.
மேலும் கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடவும் செய்தார். இந்தச் சூழலில் ராதிகா தொடர்பாக சரத்குமார் எமோஷனலாக பேசியிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.
பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் ராதிகா. லண்டனில் படிப்பை முடித்த அவரை வீட்டில் வைத்து பார்த்து கிராமத்து கதாபாத்திரத்துக்கு தேர்ந்தெடுத்தார் பாரதிராஜா.
முதல் படத்தின்போது அவ்வளவு சரளமாக தமிழ் பேச வராது. இருந்தாலும் அயராது உழைத்து அந்தப் படத்தில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார்.
முதல் படமே மெகா ஹிட்டாக அமைந்ததால் ராதிகாவுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தன.
முன்னணி நடிகை: கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொண்ட ராதிகா; ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜயகாந்த் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்து தனக்கென தனி இடத்தை பிடித்துக்கொண்டார்.
மேலும் அழகு மட்டுமின்றி தமிழ் பேச தெரிந்த; முக்கியமாக சிறப்பாக நடிக்க தெரிந்த ஒரு தமிழ் நடிகை என்ற பெயரையும் குறுகிய காலத்திலேயே பெற்றார்.
எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்யக்கூடியவராகவும் மாறி எம்.ஆர்.ராதாவின் மகள் என்பதை நிரூபித்தார்.
ஆச்சரியம் திருமணங்கள்: இதற்கிடையே ஒருவரை முதலில் திருமணம் செய்துகொண்டதாக கூறப்படும் ராதிகா; அவரை பிரிந்துவிட்டு பிரதாப் போத்தனை திருமணம் செய்தார்.
ஆனால் அந்தத் திருமணம் நிலைக்கவில்லை.மேலும் மறைந்த விஜயகாந்த்தை ராதிகா காதலித்து வந்தார்.
ஆனால் அந்தக் காதலும் கைகூடவில்லை. சூழல் இப்படி இருக்க சரத்குமாருடன் ஏற்பட்ட பழக்கம் ராதிகாவுக்கு காதலாக மாறி; அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தது.
சரத்குமார் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமண வாழ்க்கை: சரத்குமாரை திருமணம் செய்துகொண்ட ராதிகாவுக்கு ஒரு மகள், ஒரு மகன் பிறந்தார்கள். மகளுக்கு அண்மையில் திருமணம் நடந்து முடிந்தது.
மகன் வெளிநாட்டில் படித்தார். மேலும் சரத்குமாரின் முதல் மனைவியின் மகளான நடிகை வரலட்சுமிக்கும் சமீபத்தில்தான் திருமணம் முடிந்தது.
அந்தத் திருமணத்தில் முன் நின்று பல வேலைகளை இழுத்துப்போட்டு செய்தார் ராதிகா. அது அவருக்கு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது.
முக்கியமாக சரத்குமாரின் முதல் மனைவியோடும் இணக்கமான உறவையே கொண்டிருக்கிறார்.
சரத்குமார் பேட்டி: இந்நிலையில் சரத்குமார் ஒரு தனியார் யூட்யூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், ‘ராதிகா எனது முதல் மனைவியையும், அவர்களுக்கு பிறந்தவர்களையும் ரொம்பவே அரவணைப்பாக பார்த்துக்கொள்வார்.
அவர்களிடம் ராதிகாவுக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடும் ஏற்பட்டதில்லை. எனது முதல் மனைவியிடம் அவ்வளவு அன்பாக பழகுவார்.
அந்த விஷயத்தில் ராதிகா எப்போதுமே கிரேட்தான். வரலட்சுமி நடிக்கக்கூடாது என்று நான் சொன்னபோதுகூட எனது முதல் மனைவியுடன் வந்து பேசி என்னை ஒத்துக்கொள்ளவும் வைத்தார்’ என்றார். Be the first one to Comment