Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்திய ஆசிரியர் இடைநீக்கம்

.

அநுராதபுரத்தில் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடாத்திய ஆசிரியர் ஒருவர் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கணிதப் பாடத்தை கற்பிக்கும் ஆசிரியர் பாடசாலை நேரத்தில் பிரத்தியேக வகுப்புக்களை நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், பாடசாலைக்கு வருகைதந்து கையொப்பமிட்டு பிரத்தியேக வகுப்பு செல்வதாகவும் பெற்றோர்கள் குழுவொன்று வடமத்திய மாகாணக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.டபிள்யூ. சமரக்கோனிடம் முறைப்பாடு செய்திருந்தது.

அந்த முறைப்பாட்டின் பேரில், மாகாணக் கல்விப் பணிப்பாளர், ஏனைய பணியாளர்கள் குழுவுடன் இணைந்து பாடசாலையை ஆய்வு செய்த போது, இந்த ஆசிரியர், பாடசாலைக்குச் சென்று, ஆசிரியர்களின் வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட்டு, பாடசாலைக்கு வெளியே சென்று பிரத்தியேக வகுப்பில் மாணவர்களுக்கு கற்பித்ததைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, இந்த ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.