Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜே.பியினர் தலதா மாளிகைக்கு குண்டு வைத்தபோது கவலைப்பட்டார்களா? அநுரவை சாடிய கபீர் ஹாசிம் எம்.பி.

.

யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க  கருத்து வெளியிட்டமை கவலையளிக்கின்றது என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாசிம்  தெரிவித்துள்ளார்.

இன்றைய நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும் அவர் இந்த விடயத்தினை குறிப்பிட்டார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவரது வரவு செலவுத் திட்ட உரையில் யாழ்ப்பாண நூலகம் குறித்து கருத்து தெரிவித்தார்.

யாழ்ப்பாண நூலகத்திற்கு தமிழ் மக்கள் எவ்வளவோ மரியாதை செலுத்தினார்கள், மாணவர்கள் அதற்குள் நுழையும் போது பாதணிகளை கழற்றி விட்டு தான் செல்வார்கள் என்று குறிப்பிட்டார்.

யாழ்ப்பாண நூலகத்தை எரிப்பதற்கு அரசியற் கட்சி ஒன்று உடந்தையாக இருந்தது என்றும் எமது தாய்க்கட்சி அதற்கு குற்றஞ்சாட்டப்பட்டது.

எனவே ஐக்கிய தேசியக் கட்சியினால் அந்த விடயம் மேற்கொள்ளப்பட்டது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. ஆனால் அந்த விடயம் குறித்து நாங்கள் கவலைப்படுகின்றோம்.

எமது பெயர் பூசப்பட்டமை குறித்து ரணில் விக்ரமசிங்க பல வருடங்களுக்கு முன்னர் இந்த நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் என்ற வகையில் மன்னிப்பு கோரியிருந்தார்.

நாங்கள் கீழ்ப்படிவான முறையில் அந்த விடயத்தை மேற்கொண்டோம். 

ஆனால் அது குறித்து கதைக்கும் போது ஜனாதிபதிக்கு இந்த விடயம் நினைவுக்கு வரவில்லையா.

அன்று ஜேவிபியினர் பௌத்தர்களின் தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட போது அதற்கு மன்னிப்பு கோரியிருந்தார்களா, அவர்கள் ஏன் கவலைப்படுவதில்லை.

யாழ்ப்பாண நூலகம் குறித்து கதைப்பது சரி, நீங்கள் செய்த பிழை குறித்து உங்களுக்குள் விமர்சனங்களை மேற்கொண்டுள்ளீர்களா. என தெரிவித்தார்.