Breaking News
உறவுகள் அனைவருக்கும் இனிய தைத்திருநாள் வாழ்த்துக்கள் !
.
பழமைகளைப் பக்குவமாய் வழியனுப்பி புது வரவுகளுக்கு வரவேற்பு அளித்திடும் வண்ணத் திருநாள் தமிழர் திருநாள்!
பழையன கழித்து
புதிய விடியலுக்காய்
தை பிறந்து வழி பிறக்கின்றது.
உழவனுக்கு மட்டுமல்ல
உழுத காளைகளுக்கும்
கதிர் தந்த கதிரவனுக்கும்
காத்து நின்ற வயலுக்கும்
கை கூப்பி நன்றி பொங்கிய
மூத்த தமிழ்க் குடி பண்பாடு !.
அன்போடு அறமும்
பண்போடு பரிவும்
உறவோடு நலமும்
சுற்றத்தோடு சுகமும் பொங்கி,
தடைகள் தகர்த்து
தலைகள் நிமிர்ந்து
நிலைகள் உயர்ந்து
கனவுகள் கனிந்து
வலிகள் நீங்கிட
பிறக்கும் புதிய விடியல்
எமக்கும் பூத்தொளி பாச்சட்டும்!
நாமும் இன்பம் பொங்க பொங்கி மகிழ்வோம்.
உறவுகள் அனைவருக்கும்
இனிய தைத்திருநாள்இ தைப்பொங்கல் வாழ்த்துக்கள் !